ஐரோப்பிய யூனியனின் உயரிய சகாரோவ் மனித உரிமை பரிசை பெற்று கொண்ட மலாலா! - Sri Lanka Muslim

ஐரோப்பிய யூனியனின் உயரிய சகாரோவ் மனித உரிமை பரிசை பெற்று கொண்ட மலாலா!

Contributors

பாகிஸ்தானில் தலிபான்களால் சுடப்பட்டு மரணத்தில் இருந்து மீண்ட மலாலா யூசப்சாய்க்கு சமீபத்தில் ஐரோப்பிய யூனியனின் உயரிய சகாரோவ் மனித உரிமை பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, கிழக்கு பிரான்சில் உள்ள ஸ்ட்ராஸ்போர்க் நகரில் நேற்று நடைபெற்ற விழாவில் ஐரோப்பிய பாராளுமன்ற தலைவர் மார்டின் ஸ்க்கல்ஸ் மலாலாவிடம் சகாரோவ் பரிசை வழங்கி வாழ்த்தினார்.

50 ஆயிரம் யூரோக்கள் ரொக்கத்துடன் கூடிய இந்த பரிசை உலகெங்கும் உள்ள மனித உரிமை பிரசாரகர்களுக்கு அர்பணிப்பதாக மலாலா கூறினார்.

Web Design by Srilanka Muslims Web Team