ஐ ஓ சி எரிபொருள் விலைகளை அதிகரிக்கலாம்..? - Sri Lanka Muslim

ஐ ஓ சி எரிபொருள் விலைகளை அதிகரிக்கலாம்..?

Contributors

லங்கா இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் (Lanka IOC), தமது உற்பத்திகளான பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளை அதிகரிக்குமாறு அரசாங்கத்தைக் கோரியுள்ளது.

அதன்படி, பெற்றோலின் விலையை 15 ரூபாவினாலும், டீசலின் விலையை 25 ரூபாவினாலும் அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்துள்ள மையால் இலங்கையிலும் விலையை அதிகரிக்க வேண்டும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நாட்டில் எரிபொருள் விற்பனையால் நஷ்டம் ஏற்படுவதாக அந்த நிறுவனம் அரசாங்கத்துக்குத் தெரிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team