ஐ.சி.சி தரவரிசையில் இந்தியாவை பின்தள்ளுமா இங்கிலாந்து? - Sri Lanka Muslim

ஐ.சி.சி தரவரிசையில் இந்தியாவை பின்தள்ளுமா இங்கிலாந்து?

Contributors

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வெற்றி பெறும் பட்சத்தில் தரவரிசையில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என இந்தியா கைப்பற்றியது. இதன் மூலம் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 119 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி 116 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலுள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்து – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. இத்தொடரை 4-0 அல்லது 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றும் பட்சத்தில், தரவரிசையில் 2-வது இடத்துக்கு அந்த அணி முன்னேற வாய்ப்பு உள்ளது.

இங்கிலாந்தை விட 15 புள்ளிகள் பின்தங்கி ஐந்தாவது இடத்திலுள்ளது அவுஸ்திரேலியா. ஆஷல் தொடரை அவுஸ்திரேலியா சமன் செய்தாலோ அல்லது தொடரை வென்றாலோ மீண்டும் முதல் நான்கு இடங்களுக்குள் முன்னேற வாய்ப்பு உள்ளது.

ஒருவேளை அவுஸ்திரேலியா 4-0 என்ற கணக்கிலோ அல்லது தொடரை முழுமையாகவோ கைப்பற்றினால் 3-வது இடத்துக்கு முன்னேறலாம்.

2016-ம் ஆண்டுக்குள் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே, 2017-ம் ஆண்டு நடக்கவுள்ள உலகக் கிண்ண டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறும்.

Web Design by Srilanka Muslims Web Team