ஐ.சி.சி விரு­து, குழந்தை : இரட்டிப்பு மகிழ்ச்சி யில் மஹேல - Sri Lanka Muslim

ஐ.சி.சி விரு­து, குழந்தை : இரட்டிப்பு மகிழ்ச்சி யில் மஹேல

Contributors

சர்­வ­தேச கிரிக்கெட் கவுன்­சிலின் (ஐ.சி.சி.) நடப்­பாண்­டுக்­கான விளை­யாட்டு உணர்­வு­களை மதித்­த­மைக்­கான விரு­து இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரும் சிரேஷ்ட வீரருமான மஹே­ல ஜெய­வர்­தனவுக்கு கிடைத்துள்ளது.

இவ்விருது  கடந்தாண்டு நியூசிலாந்திற்கு எதிராக இடம்பெற்ற டெஸ்ட் போட்டியின் போது மஹேல ஜெயவர்தனே 91 ஓட்டங்களை பெற்றபோது ஆட்டமிழப்புச் செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் நடுவர் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னரே ஆடுகளத்தைவிட்டு வெளியேறிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் மஹேல ஜெயவர்தன பெண்குழந்தைக்கு தந்தையாகியுள்ளதால் அவர் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார்.

அவருக்கும் அவரது மனைவி கிறிஸ்டினா சிரிஸேன ஆகியேருக்கு கடந்த 3 ஆம் திகதி பெண் குழந்தை யொன்று பிறந்துள்ளது.
மஹேல ஜெயவர்தன, கிறிஸ்டினாவை கடந்த 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் திகதி கரம்பிடித்தார். இந்நிலையில் இவர்களுக்கு  நீண்ட இடைவெளியின் பின்னர் முதலாவது குழந்தை பிறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தனது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்ததை மஹேல தனது உத்தியோகபூர்வ டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
SAT

Web Design by Srilanka Muslims Web Team