ஐ.தே.க.வை மன்னித்தது பொது பல சேனா! - Sri Lanka Muslim
Contributors

ஐக்கிய தேசியக் கட்சியின் மன்னிப்பு கோரிக்கையை ஏற்றுக் கொண்டதாக பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது.

அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவிற்கு அருகாமையில் நடைபெற்ற போராட்டமொன்றின் போது பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தேஞானசார தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் தாக்கப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவத்திற்காக கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகேவும், கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவும் பொதுபல சேனா அமைப்பிடம் மன்னிப்பு கோரியிருந்தனர்.
இந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்வதாக பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது.
இதேவேளை, உத்தியோகபூர்வமாக ஐக்கிய தேசியக் கட்சி பொதுபல சேனாவிடம் மன்னிப்பு கோரவில்லை என கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-vidivelli

Web Design by Srilanka Muslims Web Team