ஒபாமா சவுதிக்கு விஜயம்! - Sri Lanka Muslim
Contributors
author image

BBC

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சவுதி அரேபியா சென்றுள்ளார். ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போர் மற்றும் இரானுடனான அணு ஒப்பந்தம் ஆகியன தொடர்பில் நிலவும் குழப்பங்களுக்கு நடுவே, ஒபாமாவின் இந்தப் பயணம் அமைந்துள்ளது.

வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் உச்சிமாநாட்டில் கலந்துக்கொள்வதற்கு முன்னதாக, சவுதி மன்னர் சல்மானை ஒபாமா சந்திக்கிறார்.

இரான் விவகாரம் உட்பட தமது கவலைகள் குறித்து அமெரிக்கா கவனம் செலுத்தும் என்று சவுதி அரேபியா நம்புவதாக ஒபாமாவுடன் சென்றுள்ள பிபிசியின் வட-அமெரிக்க செய்தியாளர் கூறுகிறார்.

ஒபாமா தனது ஒருவார கால வெளிநாட்டுப் பயணத்தில் பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கும் செல்லவுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team