'ஒமிக்ரோன் தொற்று பரவல் அபாய கட்டத்தை நெருங்கியுள்ளது' - WHO அறிவிப்பு! - Sri Lanka Muslim

‘ஒமிக்ரோன் தொற்று பரவல் அபாய கட்டத்தை நெருங்கியுள்ளது’ – WHO அறிவிப்பு!

Contributors

ஒமிக்ரோனை எதிர்கொள்ள பூஸ்டர் தடுப்பூசிகள் வேகமாக செலுத்தப்பட்டு வரும் நிலையில், அதன் பரவல் வேகம் அபாய கட்டத்தை எட்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

2019 இறுதியில் உலகம் முழுவதும் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்த நிலையில், திடீரென உருமாற்றம் அடைந்து ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என உருமாற்றம் அடைந்தது.

இதன் பின்னர் கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரோன் என்ற உருமாற்றமடைந்த வைரஸ் கண்டறியப்பட்டது. மட்டுமல்லாமல் இந்த வைரஸ் டெல்டாவை விட வீரியம் மிக்கது, பரவும் தன்மை அதிகம், தடுப்பூசிகளின் செயல்திறனை குறைக்கின்றது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் தற்போது நத்தார்;, புத்தாண்டு விடுமுறையில் மக்கள் அதிகமாக வெளியில் நடமாடுவதால் ஒமிக்ரோன் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டனில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு ஒரு இலட்சத்திற்கும் மேலாக உள்ளது. இந்த நிலையில்  ஒமிக்ரோன் தொற்று பரவல் வேகம் அபாய கட்டத்தை எட்டியுள்ளது. டெல்டா வைரசை விட ஒமிக்ரோன் பரவல் விகிதம் பல்வேறு நாடுகளில் அதிகரித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது

Web Design by Srilanka Muslims Web Team