ஒரு எழுத்துப் பிழையால் ஸ்பெய்னுக்கு பதிலாக கரீபியன் தீவுகளுக்கு விமானத்தில் சென்ற பெண்! - Sri Lanka Muslim

ஒரு எழுத்துப் பிழையால் ஸ்பெய்னுக்கு பதிலாக கரீபியன் தீவுகளுக்கு விமானத்தில் சென்ற பெண்!

Contributors

இங்கிலாந்து பெண் ஒருவர்  ஸ்பெய்னுக்கு  செல்வதற்காக விமானச் சீட்டு முற்பதிவு செய்யும் போது ஏற்பட்ட எழுத்துப் பிழையினால், ஸ்பெய்னுக்குப் பதிலாக கரீபியன் தீவுகளுக்கு விமானத்தில் பயணித்த சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.
லமென்டா கிங்டொன் என்ற 62 வயதான பெண்ணொருவரே இந்த நிலைக்கு முகம்கொடுத்தார்.
அவருக்கு மார்பகப்புற்று நோய் மற்றும் மூளையில் கட்டி இருப்பது தெரியவந்ததையடுத்து இங்கிலாந்தின் கெட்விக்கிலிருந்து ஸ்பெய்னிலுள்ள வரலாற்று புகழ்மிக்க கிரனடாவிலுள்ள அல்ஹம்ப்ரா மாளிகைக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளார்.
இதற்காக அவரது மறைந்த கணவரின் எயார் மைலிஸினைப் பயன்படுத்தி தொலைபேசியினூடாக அவியஸ் நிறுவனத்தில் விமானச் சீட்டினை முற்பதிவு செய்துள்ளார்.
இந்த விமானச் சீட்டில் ஸ்பெய்னுள்ள கிரனடா என்பதற்கு பதில் ஒரு எழுத்து மாற்றத்தினால் கரீபியன் தீவிலுள்ள கிரெனடா என அச்சிடப்பட்டுள்ளது. அதாவது ஆங்கிலத்தில் ஸ்பெய்ன் நகரை Granada  எனவும் கரீபியனிலுள்ள நகரை Grenada எனவும் எழுதப்படுவதே இதற்கு காரணம்.
இங்கிலாந்தின் கெட்விக் நகரிலிருந்து விமானத்தில் பயணிக்கும்போது அருகிலுள்ள பயணியிடம் பேசியுள்ளார். இதன்போதே தான் கரீபியனுக்கு செல்வது லமென்டாவுக்கு தெரியவந்துள்ளது.

பின்னர் விமானப் பணியாளர்களின் உதவியுடன் சென் லூஸியாவில் தரையிறங்கியுள்ளார். அடுத்த நாள் கிரெனடா விமானநிலையத்திலிருந்து மீண்டும் கெட்விக் நகருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
அத்துடன் நியூஸிலாந்து செல்வதற்கு போதுமான எயார் மைல்ஸ் பொ

ய்ன்ஸும் இவர் கரீபியனில் தங்கிய ஒரு நாள் செலவையும் விமானச்சீட்டு நிறுவனம் வழங்கியுள்ளது.
இது குறித்து லமென்டா கூறுகையில், “உண்மையாகவே நான் யாரையும் ஏமாற்ற இவ்வாறு செய்யவில்லை. எழுத்துப் பிழையை நான் கவனிக்கவில்லை. ஆனால் நான் இதற்காக முறைப்பாடு செய்யப்போவதில்லை. ஏனெனில் அவர்கள் (அவியஸ்) என்னை சிறப்பாக நடத்தினர்” எனத் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team