ஒரு நாளைக்கு 2 வேளை சாப்பிடும் நிலை வரும் - ரணில் எச்சரிக்கை..! - Sri Lanka Muslim

ஒரு நாளைக்கு 2 வேளை சாப்பிடும் நிலை வரும் – ரணில் எச்சரிக்கை..!

Contributors

அடுத்தடுத்து வரும் மாதங்களில் மிகவும் மோசமான நிலையை இலங்கை மக்கள் எதிர்கொள்ளவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.  உக்ரேன்- -ரஷ்யா போரினால் இலங்கையின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடையக்கூடும்.

இலங்கையர் பலருக்கு இரண்டு வேளை உணவுடன் தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்ள வேண்டி வருமெனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். 

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் தாக்கம் இப்போதுதான் ஆரம்பமாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

உக்ரைன் – ரஷ்ய போரின் முழு தாக்கத்தை இலங்கை இன்னும் அனுபவிக்கவில்லை. இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் உலகளாவிய உணவுப் பற்றாக்குறை ஏற்படும். அதன் தாக்கம் இலங்கையில் 2024ஆம் ஆண்டு வரை நீடிக்குமென அவர் குறிப்பிட்டுள்ளார். 

உலகளாவிய உணவு நெருக்கடிக்கு மேலதிகமாக, இலங்கை இந்த ஆண்டு சிறுபோக மற்றும் பெரும்போகத்தின் போது உணவுப் பயிர்களை பயிரிடாமை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். 

இதன் விளைவாக, இலங்கையர் விரைவில் ஒரு நாளைக்கு இரண்டு வேளை மட்டுமே சாப்பிட வேண்டியிருக்குமென பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team