ஒலுவில் ஜே.வஹாப்தீன் எழதிய குலைமுறிசல் நாவல் வெளியீட்டு விழா » Sri Lanka Muslim

ஒலுவில் ஜே.வஹாப்தீன் எழதிய குலைமுறிசல் நாவல் வெளியீட்டு விழா

Contributors
author image

P.M.M.A.காதர்

ஒலுவில் ஜே.வஹாப்தீன் எழதிய குலைமுறிசல் நாவல் வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(23-04-2017) ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் பிறை எப்.எம்.கட்டுப்பாட்டாளர் பஷீர் அப்துல் கையூம் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ,ஏ.எல்.எம்.நஸீர்,கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை,சட்டத்தரணி ஆரிப்சம்சுதீன் அகியோருடன் இலக்கிய அதிதியாக கவிஞர் சோலைக்கிளியும் கலந்து கொள்கின்றார்.

உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி சத்தார் எம்.பிர்தௌஸ், ஊடகவியலாளரும், ஆசிரியருமான ஜெஸ்மி எம்.மூஸா ஆகியோர் நூல்பற்றிய உரையாற்றவுள்ளனர். நூலின் முதன்மைப் பிரதிகளை எம்.வை.எல்.எம்.நஹீம், ஏ.எல்.சஹீட், எஸ்.லாஹிர், மௌலவி ஜெ.றிம்ஸான் ஆகியோர் பெறவுள்ளனர்.
ஒலுவில் அஷ்-ஷதீக் பௌண்டேசன் விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

boo boo.jpg2 

Web Design by The Design Lanka