ஒஸாமா பின்லேடனை பிடிப்பதற்கு அமெரிக்காவிற்கு உதவிய மருத்துவர் மீது கொலை வழக்கு! - Sri Lanka Muslim

ஒஸாமா பின்லேடனை பிடிப்பதற்கு அமெரிக்காவிற்கு உதவிய மருத்துவர் மீது கொலை வழக்கு!

Contributors

பாகிஸ்தானில் பாரா அருகேயுள்ள சிபா பகுதியைச் சேர்ந்த நஷீபா குல் என்பவரது மகனை தவறான அறுவை சிகிச்சை செய்து கொலை செய்ததாக மருத்துவர் ஷகீல் அப்ரிடி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்-காய்தா பயங்கரவாதி பின்லேடனைப் பிடிக்க உதவியவர் இந்த மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, மருத்துவர் ஷகீல் அப்ரிடி, தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு பெஷாவர் சிறையில் உள்ளதால், இந்த வழக்கு மீதான விசாரணை டிசம்பர் 20-ஆம் தேதி சிறையிலேயே நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பிடியாணை பெஷாவர் சிறை கண்காணிப்பாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

நஷீபா அளித்த புகாரில், “2007-ஆம் ஆண்டு ஷகீல் அப்ரிடி செய்த தவறான அறுவை சிகிச்சை காரணமாக என் மகன் இறந்துவிட்டான். அறுவை சிகிச்சை செய்வதற்கான மருத்துவத் தகுதி அவருக்கு இல்லை. அதையும் மீறி அவர் சிகிச்சை அளித்ததால்தான் என் மகன் இறந்தான். எனவே, அவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். லஷ்கர்-இ-இஸ்லாம் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக ஷகீல் அப்ரிடிக்கு 33 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team