ஓட்டமாவடியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி - Sri Lanka Muslim

ஓட்டமாவடியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி

Contributors

மட்டக்களப்பு, ஓட்டமாவடிப் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞனொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு இடம்பெற்ற இவ்விபத்தில், வாழைச்சேனையைச் சேர்ந்த அப்துல் ரஹீம் மொஹமட் (17 வயது) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த வேளை, வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவித்த வாழைச்சேனைப் பொலிஸார், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team