ஓரினச் சேர்க்கையில் 6 ஆம் வகுப்பு மாணவன் படுகொலை! - Sri Lanka Muslim

ஓரினச் சேர்க்கையில் 6 ஆம் வகுப்பு மாணவன் படுகொலை!

Contributors

-சுவனப்பிரியன்
எவ்வளவு சிறந்த கல்வி நிறுவனங்கள் நமது அக்கம் பக்கத்தில் இருந்தாலும் குழந்தைகளை ஹாஸ்டலில் தங்கி படிக்க வைப்பதை ஒரு பேஷனாக இன்று ஆக்கி விட்டோம். ஆனால் உறவினர்களின் அரவணைப்பு இல்லாத அந்த ஹாஸ்டல் வாழ்க்கையில் என்னவெல்லாம் தவறுகள் நடந்து விடுகிறது என்பதை நாம் சிந்திப்பதில்லை. கண்டிப்பாக குழந்தைகள் வெளியூர்களில் தான் தங்கி படிக்க வேண்டும் என்ற நிலை இருந்தால் அந்த கல்லூரிக்கு பக்கத்திலோ அல்லது பள்ளிக்கு பக்கத்திலோ ஒரு வீட்டை வாடகை பிடித்து குழந்தையின் தாயாரும் தகப்பனாரும் குழந்தையோடு தங்கி விடுவதே நல்லது. எந்த நிலையில் இரவு நேரத்தில் மாணவன் வீட்டுக்கு வந்து விடும் சூழலை உண்டாக்க வேண்டும்.
ஓரளவு விபரம் தெரிந்தவுடன் தனியாக ஹாஸ்டலில் தங்க வைப்பதில் தப்பில்லை. இரண்டும் கெட்டான் வயதில் நல்லது எது தீயது எது என்று பிரித்துப் பார்க்கும் பக்குவம் இல்லாத வயதில் நாம் குழந்தைகளை தனியே விடுவது சரிதானா என்பதை சிந்திக்க கடமைபட்டுள்ளோம். ஏனெனில் பல தவறுகளின் பிறப்பிடமாக இன்று ஹாஸ்டல்கள் மாறி விட்டன. நமது குழந்தைகளை நேர் வழிப் படுத்துவது நமது கையில் தான் இருக்கிறது. எனது பள்ளி தோழன் ஒருவன் பிளஸ் டூ வரையில் மிக நேர்மையானவனாக இருந்தான். அதன் பிறகு திருச்சியில் கல்லூரி ஹாஸ்டலில் தங்க ஆரம்பித்த இரண்டு மாதத்தில் மது அருந்துவதும், சிகரெட் பிடிப்பதும், பெண்கள் தொடர்புமாக அவனது வாழ்வே மாறி விட்டது. இன்று வரை அதிலிருந்து அவனால மீள முடியவில்லை. நான் ஏன் இந்த அளவு பீடிகை போட்டு எழுதுகிறேன் என்பதற்கு நேற்று நமது தமிழ் தினசரியில் வந்த செய்தியே ஒரு உதாரணம். அதனை அப்படியே தருகிறேன் படித்துப் பாருங்கள்.
———————————————–
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் தகாத உறவை வெளியில் சொல்லி விடுவான் என்று, ஆறாம் வகுப்பு மாணவனை, “செப்டிக் டேங்க்’ ல் தள்ளி கொலை செய்த 10 ம் வகுப்பு மாணவனை கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
பழநி சவுடம்மன் கோயில் தெருவை சேர்ந்த கருணாகரன் மகன் ஹரிபிரசாத்,11. இவர், திண்டுக்கல் ம.மு.கோவிலூர் சி.எஸ்.எம்.ஏ., மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி ஆறாம் வகுப்பு படித்துவந்தார். அக்., 7 முதல் மாணவனை காணவில்லை. நேற்று முன்தினம் பள்ளி வளாகத்தில் உள்ள “செப்டிக்டேங்க்’ ல் மாணவன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அக்., 7 ல் படிப்பு நேரம் துவங்கிய போது, ஹரிபிரசாத் மட்டும் வரவில்லை. 10 ம் வகுப்பு படிக்கும் 16 வயதுடைய மற்றொரு மாணவன் மட்டும் தாமதமாக வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இன்ஸ்பெக்டர் இளங்கோவன் ஜென்னிங்ஸ், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் சக்திவேல், ஜெரோம் ஆகியோர் முன்னிலையில் மாணவனிடம் விசாரித்தார்.
இன்ஸ்பெக்டர் கூறியதாவது: 10 ம் வகுப்பு மாணவன், ஹரிபிரசாத்தை ஓரினசேர்க்கைக்கு அழைத்துள்ளான். இதை விடுதி காப்பாளரிடம் தெரிவிப்பதாக ஹரிபிரசாத் கூறியுள்ளான். இதில் ஆத்திரமடைந்த 10 ம் வகுப்பு மாணவன், ஹரிபிரசாத்தை கொல்ல திட்டமிட்டுள்ளான்.
முன்னதாகவே “செப்டிக் டேங்க்’ மூடியை திறந்து வைத்து விட்டு, அந்த வழியே ஹரிபிரசாத்தை அழைத்து சென்றவன், உள்ளே தள்ளிவிட்டுள்ளான். ஹரிபிரசாத் தப்பித்து மேலே வர சுவற்றை பிடித்துள்ளான். கையை, காலால் மிதித்து உள்ளே தள்ளிவிட்டு “செப்டிக் டேங்க்’ கை மூடிவிட்டு சென்றுள்ளான், என்றார்.
 கோர்ட்டில் ஆஜர்: 10 ம் வகுப்பு மாணவனை போலீசார், திண்டுக்கல் ஜே.எம்.,1 கோர்ட்டில் உள்ள இளம்சிறார்கள் கோர்ட் தலைவர் வேதகிரி முன்பு ஆஜர்படுத்தினர். மாணவனை சீர்திருத்தப்பள்ளியில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
தாயிடம் கெஞ்சிய மகன்:
மாணவன் ஹரிபிரசாத்தும், 10 ம் வகுப்பு மாணவனும் முதல் முறையாக விடுதியில் சேர்ந்துள்ளனர். 10 ம் வகுப்பு மாணவன் இரண்டு முறை பெயிலாகி இங்கு சேர்த்துள்ளான். கடந்த முறை பார்க்கவந்தபோது, ஹரிபிரசாத், தனக்கு விடுதி பிடிக்கவில்லை என்றும், விடுதியில் நல்லவர்கள் இல்லை என்றும் தாயிடம் கெஞ்சியுள்ளான். சமாதானப்படுத்திவிட்டு அவரது தாய் சென்றுள்ளார்.
……………………………………………………………………….
குர்ஆன் எச்சரிக்கும் ஓரினச் சேர்க்கை:
‘உலகில் உங்கள் இறைவன் உங்களுக்காகப் படைத்துள்ள உங்கள் மனைவியரை விட்டு விட்டு ஆண்களிடம் செல்கின்றீர்களா? இல்லை. நீங்கள் வரம்பு கடந்த கூட்டமாக இருக்கின்றீர்கள்.’ என்றும் கூறினார்.
‘லூத்தே! நீர் விலகிக் கொள்ளா விட்டால் வெளியேற்றப் படுவோரில் நீரும் ஒருவர்!’என்று அவர்கள் கூறினார்கள்.
‘உங்கள் செயலை நான் வெறுப்பவனே!’ என்று அவர் கூறினார்.
‘என் இறைவா! என்னையும் என் குடும்பத்தினரையும் அவர்கள் செய்து கொண்டிருப்பவற்றை விட்டு காப்பாற்றுவாயாக என்றும் கூறினார்.
26 : 165,166,167,168,169 – குர்ஆன்.
தன் சமுதாயத்து மக்களிடம் ஓரினச் சேர்க்கையான இந்த பெரும் பாவத்தை விட்டுவிடும்படி பிரச்சாரம் செய்தும் அவர்கள் திருந்துவதாக இல்லை. ‘இந்த பிரச்சாரத்தை விட வில்லை என்றால் உம்மை ஊரை விட்டு வெளியாக்குவோம்’ என்றும் அந்த மக்கள் கூறினர்.
‘உங்கள் விஷயத்தில் எனக்கு சக்தி இருக்கக் கூடாதா? அல்லது பலமான ஆதரவை நான் பெற்றிருக்கக் கூடாதா?’என்று அவர் கூறினார்.
‘லூத்தே! நாங்கள் உமது இறைவனின் தூதர்கள்.அந்த மக்கள் உம்மை நெருங்கவே முடியாது. உமது மனைவியைத் தவிர உமது குடும்பத்தாருடன் இரவின் ஒரு பகுதியில் புறப்படுவீராக! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களுக்கு ஏற்படக் கூடியது அவளுக்கும் ஏற்படும். அவர்களின் காலக் கெடு வைகறைப் பொழுது.வைகறைப் பொழுது சமீபத்தில் இல்லையா?’என்றனர்.
11 : 80,81 – குர்ஆன்.
லோத்தின் பிரார்த்தனையை ஏற்ற இறைவன் அந்த ஊரை அழிப்பதற்காக இரண்டு வானவரை அனுப்பினான்.
‘அவர்கள் மீது சூடேற்றப்பட்ட கல மழை பொழிந்து அவ்வூரின் மேற்பகுதியை கீழ்ப்பகுதியாக்கினோம். சிந்திப்போருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. அவ்வூர் நீங்கள் சென்று வரும் நிலையான சாலையில்தான் உள்ளது. ’15 : 74,75,76 – குர்ஆன்

இறைவனின் கோபத்திற்க்குள்ளான அந்த ஊர் இன்றும் ஜோர்டானில் சபிக்கப் பட்டதற்கான அடையாளங்களோடு செத்த கடல் என்று சொல்லப் படும் (Dead Sea) யை ஒட்டி அமைந்திருப்பதைக் காணலாம். இந்த கடல் பிரசேத்தை அரபியில் ‘பஹ்ரல் மௌத்’ என்று சொல்வார்கள். (bns)

Web Design by Srilanka Muslims Web Team