கஃபதுல்லாஹ்வுக்கு தீ வைக்க முனைந்த நபர் மடக்கிப்பிடிப்பு ( வீடியோ) - முழுவிபரம் இணைப்பு - Sri Lanka Muslim

கஃபதுல்லாஹ்வுக்கு தீ வைக்க முனைந்த நபர் மடக்கிப்பிடிப்பு ( வீடியோ) – முழுவிபரம் இணைப்பு

Contributors
author image

Editorial Team

(video)

மக்கா பள்ளிவாசலினுள் தன்னைத் தானே தீவைக்க முனைந்த அதிர்ச்சிகர சம்பவமொன்று நடைபெற்றுளள்து.

மெக்கா  பள்ளிவாசலுக்கு கடந்த திங்கள் இரவு இரவு 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்தார்.

திடீரென தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அதைப் பார்த்த யாத்ரீகர்கள் மற்றும் போலீசார் பாய்ந்து சென்று அவரை தடுத்து காப்பாற்றினர்.

விசாரணையில் அந்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது. இத்தகவலை பெரிய பள்ளிவாசல் போலீஸ் செய்தி தொடர்பாளர் மேஜர் சமேக் அல்-சலாமி தெரிவித்தார்.

முன்னதாக அந்த நபர் புனித கஃபதுல்லாஹ்வின்  திரைச்சீலைக்கு (கிஸ்வா) தீவைக்க முயன்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள்.

எரிபொருள் கலனுடன் குறித்த நபர் உடன் மடக்கிப்பிடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் முஸ்லிம்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team