கஃபதுல்லா மீதான தற்கொலைத் தாக்குதல் முறியடிப்பு: 11 பேர் படுகாயம் - சவுதியில் அதிர்ச்சி - Sri Lanka Muslim

கஃபதுல்லா மீதான தற்கொலைத் தாக்குதல் முறியடிப்பு: 11 பேர் படுகாயம் – சவுதியில் அதிர்ச்சி

Contributors
author image

Editorial Team

சவுதி அரேபியாவில் உள்ள புனித மக்கா பள்ளிவாசல் மீதான தற்கொலைத் தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாக சவுதி ஊடகங்கள் அறிவித்துள்ளன.

நேற்று வெள்ளிக்கிழமை இந்த அதிர்ச்சிகர இச்சம்பவம் மக்காவில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது

கஃபதுல்லாவை தாக்கும் நோக்கத்தோடு ஒரு தற்கொலைதாரி புனித கஃபாவை நெருங்கியுள்ளார்.

இதனை அறிந்த சவுதி பொலிசார் அவரை சுற்றிவளைத்துள்ளனர்.

இதன் காரணமாக தற்கொலைதாரி குண்டை வெடிக்கச் செய்துள்ளார். இச்சம்பவத்தில் அருகில் இருந்த 03 மாடிக் கட்டிடம் சேதமடைந்துள்ளது.

இச்சம்பவத்தில் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் ஐவர் சவுதி பொலிஸ் உத்தியோகத்தர்களாவர்.

உம்ரா கடமைக்காக உலகம் பூராகவும் இருந்து பல இலட்சம் முஸ்லிம்கள் மக்கா பள்ளிவாசலுக்கு வந்துள்ள நிலையில் இச்சம்பவம் பாரிய அதிர்ச்சியளித்துள்ளது.

இச்சம்வம் தொடர்பில் சவுதி பொலிசார் துரித விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வருடங்களிலும் மக்கா பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்த வந்து அவைகள் இறைவன் உதவியினால் முறியடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

sa

m

Web Design by Srilanka Muslims Web Team