கஃபாவில் தொழில் புரிவோருக்கு விசேட பயிற்சிகள்!

Read Time:1 Minute, 25 Second

qout225

 

 -முஹம்மது மஃதூம்- 

 

ஹஜ் மற்றும் உம்ரா புனித கடமைகளின் போது புனித தளமான கஃபாவை தரிசிக்க செல்வோருக்கான சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் அங்கே தொழில் புரிவோருக்கு தொடர்பாடல்  திறனை மேம்படுத்த பல்வேறு பயிற்ச்சிகளை வழங்குவதற்கு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

 

 

புனித நகரான மக்காவில் அமைந்துள்ள தலை சிறந்த பல்கலைக் கழகமான உம் அல் குரா பல்கலைக் கழகத்தின் அனுசரணையுடனேயே மேற்படி பல் துறை சார்ந்த தொழிலாளர்களுக்கு பல்வேறுவிதமான பயிற்ச்சிகள் வழங்கப்படவுள்ளன.

 

 

ஹஜ் மற்றும் உம்ரா கடமைகளுக்காக மற்றும் புனித தளங்களை தரிசிக்க செல்வோருக்கு சரியான சேவைகளை வழங்க புனித தளத்தின் அனைத்து தொழிலாளர்களும் மேற்படி பயிற்ச்சி நெறியில் நுழைந்து தமது திறமைகளை மேம்படுத்திக் கொள்வது அவசியமாகும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

http://www.worldbulletin.net/news/128177/masjid-al-haram-workers-start-training-to-improve-skills

Previous post கொழும்பு ஊடகவியலாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த சுதந்திரதின நிகழ்வுகள் (புகைப்படம்)
Next post ஊடகவியலாளர் எஸ்.எம்.மரிக்காருக்கு ஐ.தே.க சார்பில் போட்டியிட சந்தர்ப்பம்