கசினோவை விட அபாயமான சூதாட்டங்கள் இலங்கையில் உள்ளன! பலவீனமான வெளியுறவுக் கொள்கை!– ஐதேக - Sri Lanka Muslim

கசினோவை விட அபாயமான சூதாட்டங்கள் இலங்கையில் உள்ளன! பலவீனமான வெளியுறவுக் கொள்கை!– ஐதேக

Contributors

கசினோ சூதாட்டத்தைக் காட்டிலும் ரேஸ் பை ரேஸ் குதிரை பந்தயங்களினால் ஏற்படும் பாதிப்புகள் ஏற்கனவே அதிகமாக இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினருமான அஜித் பீ. பெரேரா இந்த குற்றச்சாட்டை தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:

இலங்கையில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ரேஸ் பை ரேஸ் பந்தயங்கள் தடை செய்யப்பட வேண்டும்.

எமது நாட்டில், இதுவரை நடைபெற்று வந்த சிறிய அளவிலான கசினோ போன்ற சூதாட்டங்களான ரேஸ் பை ரேஸ், குதிரைப் பந்தயங்கள், நாய் பந்தயங்கள் மற்றும் நானாவித பந்தய வியாபாரங்களுக்கு இலங்கை குடியரசில் அனுமதிப் பத்திரம் இல்லை.

கிராமங்களில் சூதாட்ட மையங்கள், பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு நீதிமன்றத்தின்; முன்னிலையில ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

ஆனால் பாரிய அளவில் மேற்கொள்ளப்படும் பந்தய வியாபாரங்களுக்கு இவ்வாறான பிரச்சினைகள் இல்லை.

எனவே, சிறிய அளவிலோ, பாரிய அளவிலோ அல்லது வேறு எந்த வகையிலான பந்தய வியாபாரங்களுக்கோ அனுமதி அளிக்க வேண்டாம் என அனைவரும் ஒருமித்த குரலில் அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும்.

மிகவும் பலவீனமான வெளியுறவுக் கொள்கை பின்பற்றப்படுகின்றது – ஐ.தே.க

இலங்கையில் மிகவும் பலவீனமான வெளியுறவுக் கொள்கைப் பின்பற்றப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது இலங்கையின் வெளியுறவுக் கொள்கைகள் மிகவும் பலவீனமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே உலகத் தலைவர்கள் இலங்கை மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் எந்தவொரு யோசனைக்கும் கை தூக்கும் அமைச்சரவை, ஜேம்ஸ் பாக்கரின் கசினோ சூதாட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் ஆளும் கட்சிக்குள் முரண்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முரண்பாடுகள் தீர்க்கப்பட்டு வரும் நிலையில் ஆளும் கட்சியின் முரண்பாடுகள் உக்கிரமடைந்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் பலவீனமான வெளியுறவுக் கொள்கை பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக நாட்டின் வெளியுறவுக் கொள்கைகள் மாற்றியமைக்கப்பட வேண்டுமென ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.lwin

Web Design by Srilanka Muslims Web Team