கசினோ இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு அவசியமானது: எஸ்.பி.திஸாநாயக்க - Sri Lanka Muslim

கசினோ இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு அவசியமானது: எஸ்.பி.திஸாநாயக்க

Contributors

இலங்கையில் சுற்றுலாத் துறையில் வளர்ச்சியை ஏற்படுத்த கசினோ சூதாட்டம் அவசியமானது என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

கண்டி பேராதனை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனை கூறினார்.

கசினோ சூதாட்டத்தை விட பல மடங்கு தீங்கான குதிரை பந்தய சூதாட்டம் உட்பட பல சூதாட்டங்கள் நிலையங்கள் இருக்கின்ற போதிலும் அதனை எவரும் எதிர்ப்பதில்லை.

இலங்கையில் குறைந்த வருமானத்தை பெறும் சாதாரண மக்கள் குதிரை பந்தய சூதாட்டத்திற்காக பணத்தை செலவிடுகின்றனர். அத்துடன் அதில் பணத்தை இழந்து விளைவுகளை சந்திக்கின்றனர்.

இலங்கையில் கசினோவுக்கான தனியான இடம் ஒதுக்கப்பட்டு அங்கு வெளிநாட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். நாட்டில் ஏனைய இடங்களில் இருக்கும் கசினோ நிலையங்கள் ஒரு இடத்திற்கு கொண்டு செல்லப்படும்.

குதிரை பந்தியம் ஏற்படுத்தும் தீங்கை கசினோ ஏற்படுத்தாது. கொழும்பில் கசினோ நிலையங்கள் ஏற்படுத்தப்படுவது நாட்டின் சுற்றுலாத்துறைக்கு மட்டுமல்லாது நாட்டின் பொருளாதாரத்திற்கும் உதவும்

இலங்கையின் சுற்றுலாத்துறை வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இது போன்ற நேரத்தில் அந்த வளர்ச்சியை முன்னோக்கி தள்ளுவதற்கு பதிலாக அதனை ஆதரிக்க வேண்டும் என்றார்.lw

 

Web Design by Srilanka Muslims Web Team