கசினோ குறித்த அமைச்சர்களின் கருத்தை முன்வைக்குமாறு ஜனாதிபதி கோரியுள்ளார்! - Sri Lanka Muslim

கசினோ குறித்த அமைச்சர்களின் கருத்தை முன்வைக்குமாறு ஜனாதிபதி கோரியுள்ளார்!

Contributors

கசினோ சூதாட்ட ஹோட்டல்கள் தெடர்பில் அமைச்சர்களின் கருத்துக்களை முன்வைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.

எதிர்வரும் 31ம் திகதி நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இது தெடர்பிலான தங்களது கருத்துக்களை முன்வைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கசினோ சூதாட்ட மையங்கள் அமைப்பது தொடர்பில் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவிருந்த சட்டப் பிரேரணை வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது.

ஆளும் கட்சி அமைச்சர்களுக்கு இடையில் நிலவிய முரண்பாடுகளே இதற்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர்களுடன் மீளவும் கலந்தாலோசித்து இந்த சட்டப் பிரேரணையை முன்வைக்க ஜனாதிபதி உத்தேசித்துள்ளதாகத் தெரியவருகிறது.

திருத்தங்களுடன் சட்டப் பிரேரணையை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதா இல்லையா என்பது அமைச்சரவைக் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட உள்ளது.lw

Web Design by Srilanka Muslims Web Team