கடந்த 2015 ஆம் ஆண்டிற்கு முன்னரான யுகம் மீண்டும் நினைவுபடுத்தப்படுகிறது - கரு ஜயசூரிய - Sri Lanka Muslim

கடந்த 2015 ஆம் ஆண்டிற்கு முன்னரான யுகம் மீண்டும் நினைவுபடுத்தப்படுகிறது – கரு ஜயசூரிய

Contributors

நா.தனுஜா)

ஊடகவியலாளர் ஒருவர் கடத்தப்பட்டு, தாக்கப்பட்ட சம்பவத்தை மேற்கோள்காட்டி, கடந்த 2015 ஆம் ஆண்டிற்கு முன்னரான யுகத்தை மீண்டும் நினைவுபடுத்தும் வகையில் கடந்த 10 ஆம் திகதி ஊடகவியலாளர் ஒருவர் கடத்தப்பட்டதுடன் தாக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்டிருக்கிறார் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் டுவிட்டரில் பதிவொன்றைச் செய்திருக்கும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய மேலும் கூறியிருப்பதாவது, தமது சகா ஒருவர் பாதிப்பிற்குள்ளாகும் வேளையில் ஏனைய ஊடகங்கள் அவருக்கான ஆதரவை வெளிப்படுத்தாமை பெரிதும் கவலையளிக்கின்றது.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யார் என்பது பற்றி உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

Web Design by Srilanka Muslims Web Team