கடன் தொடர்பான தகவல் அறிக்கைகளை இணையத்தில் பார்வையிடலாம்! - Sri Lanka Muslim

கடன் தொடர்பான தகவல் அறிக்கைகளை இணையத்தில் பார்வையிடலாம்!

Contributors

(Nf)  கடன் தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கைகளை இணையத்தளத்தில் வெளியிட இலங்கை கொடுகடன் தகவல்கள் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இணையத்தளத்தின் ஊடாக கடன் அறிக்கையை பார்வையிடுவதற்கு முன்கூட்டியே தம்மை பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என பணியகத்தின் பணிப்பாளர் காமினி கருணாரத்ன தெரிவித்தார்.
வழமையான முறையின் ஊடாக தபால் மூலம் கடன் தொடர்பான அறிக்கையொன்றை பெற்றுக்கொள்ள 10 நாட்கள் தேவைப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறையை பயன்படுத்துவதன் மூலம் உடனடியாக இணையத்தளங்களில் கடன் தொடர்பான அறிக்கைகளை பார்வையிடுவதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team