சாய்ந்தமருதில் கடற்கரை பிரதேசமொன்று இல்லாமல் போகும் அபாயம்! - Sri Lanka Muslim

சாய்ந்தமருதில் கடற்கரை பிரதேசமொன்று இல்லாமல் போகும் அபாயம்!

Contributors

சாய்ந்தமருது கடற்கரையோரப் பிரதேசம் கடலரிப்பினால் பாரிய சேதத்திற்குள்ளாகி வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மைக்காலமாக கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் மற்றும் பாரிய அலையின் வேகத்தினால் கடலோரம் தினசரி பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருவதுடன் , கரைவலை மீனவர்களின் தோணிகளையும், வள்ளங்களையும் பாதுகாப்பாக பேணுவதற்கு வேறு இடமில்லாமல்  மீனவர்கள் பெரும் கஸ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது கூட பாதிக்கப்படாத சாய்ந்தமருது கடலோரப்பிரதேசம் தற்போதுள்ள கடலரிப்பினால் பாதிக்கப்பட்டு வருவது பிரதேச மக்களுக்கு பெரும் கவலையளிக்கின்றது.

தொடர்ச்சியாக இவ்வாறு கடலரிப்பு தொடருமேயானால் சாய்ந்தமருதில் கடற்கரை பிரதேசமொன்று இல்லாமல் போவதுடன், கரைவலை மற்றும் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் மீனவர்களும் தொழிலில்லாமல் நிர்க்கதி நிலைக்கு உள்ளாக வேண்டிவரும் என அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team