கடவுளை நெருங்க புற்களை உண்ணும் அறிவு ஜீவிகள்! (படங்கள் இணைப்பு) - Sri Lanka Muslim

கடவுளை நெருங்க புற்களை உண்ணும் அறிவு ஜீவிகள்! (படங்கள் இணைப்பு)

Contributors

கடவுளை நெருங்குவதற்காக தென்னாப்பிரிக்கா மக்கள் புற்களை உண்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தென்னாப்பிரிக்கா நாட்டில் காரன்குவா பகுதியில் வசிக்கும் மக்களிடம் லெசிகோ டேனியல் என்ற மத தலைவர், பூமியில் விளைவதை உண்பதன் வழியாக நாம் கடவுளுக்கு அருகில் நெருங்கி செல்வோம் என்றும் அது மதத்தின் பக்தியை வெளிப்படுத்தும் அடையாளமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

 

அதனை கேட்ட அங்கு வசிக்கும் மக்கள் ஆடுகளை போன்று மண்டியிட்டு கொண்டு புற்களை உண்ண ஆரம்பித்துவிட்டனர்.

 

அவர்களில் சிலர், தங்களது உடல் வியாதிகளான தொண்டை கரகரப்பு மற்றும் ஸ்டிரோக் போன்றவை குணமாகியுள்ளன என்றும் தெரிவித்துள்ளனர்.

 

இந்த தகவல் பல்வேறு சமூக வலைதளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது. தன்னை பின்பற்றுபவர்களிடம் டேனியல், தங்களது உடலுக்கு உணவு அளிப்பதற்கு எதை வேண்டுமானாலும் மனிதர்கள் உண்ணலாம் என்று தெரிவித்துள்ளார்.

 

Web Design by Srilanka Muslims Web Team