கடாபி மகனுக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தடை! - Sri Lanka Muslim

கடாபி மகனுக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தடை!

Contributors

காலஞ்சென்ற லிபியத் தலைவர் முஅம்மர் கடாபியின் மகன் சயிப் இஸ்லாம் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.

சட்டக் காரணங்களை காட்டி சயிப் அல் இஸ்லாம் கடாபி உட்பட பல விண்ணப்பதாரர்களின் வேட்புமனுக்களை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளதாக உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

டிசம்பர் 24ஆம் திகதி நடைபெறவிருக்கும் தேர்தலில் சயிப் இஸ்லாம் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. போர் குற்றத்திற்காக சர்வதேச நீதிமன்றத்தால் தேடப்படுபவராக அவர் உள்ளார்.

நாட்டின் பலம்மிக்கவராக உள்ள காலிபா ஹப்தர் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் அமெரிக்க நீதிமன்றங்களில் குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுத்துள்ளார். நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களில் அவரது பெயரும் உள்ளதா என்பது உறுதி செய்யப்படவில்லை.

இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அறுபது பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 46 வயது பெண் உரிமை செயற்பாட்டாளர் லெய்லா பென் கலிபா ஒரே பெண் வேட்பாளராக உள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team