கட்சித் தாவலை தடுக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விசேட நடவடிக்கை! - Sri Lanka Muslim

கட்சித் தாவலை தடுக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விசேட நடவடிக்கை!

Contributors

எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தல்களில் கட்சி உறுப்பினர்கள் கட்சித் தாவுவதனை தடுக்கும் வகையில் விசேட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

இதன் முதல் கட்டமாக மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் விசேட உறுதிமொழியொன்று பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.

தேர்தலில் போட்டியிடுதவற்கு முன்னதாகவே இந்த ஆவணத்தில் கையொப்பம் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.

எந்த காரணத்திற்காகவும் கட்சித் தாவுவதில்லை எனவும், கட்சியின் தீர்மானங்களுக்கு இணங்குவதாகவும் உறுதியளித்து ஆவணங்கள் பெற்றுக்கொள்ளப்பட உள்ளன.

கடந்த காலங்களில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கட்சி கோட்பாடுகளை மீறிச் செயற்பட்டதனைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.lw

Web Design by Srilanka Muslims Web Team