கட்டாரில் அல் மஸ்ஜிதுல் அக்ஸா கண்காட்சி - Sri Lanka Muslim

கட்டாரில் அல் மஸ்ஜிதுல் அக்ஸா கண்காட்சி

Contributors

(A.J.M மக்தூம்)

கட்டார் அவ்காப் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சர், கலாநிதி கைத் பின் முபாரக் அல் குவாரிஸ் அல் மஸ்ஜிதுல் அக்ஸா கண்காட்சி மற்றும் அதன் நிகழ்ச்சி நிரல்களையும் துவங்கி வைத்தார்.

 

முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமான அல் அக்ஸா மஸ்ஜிதின் அந்தஸ்தத்தை உலகுக்கு எடுத்து காட்டுவதாக குறித்த கண்காட்சி அமைந்திருந்ததோடு அது எதிர் நோக்கும் சவால்களுக்கு எதிர்பார்க்கப் படும் பங்களிப்பு என்ன என்பவற்றை தெளிவு படுத்துவத்தும் வகையிலும் அதன் நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன என “அல் அரப்” பத்திரிகை குறிப்பிட்டிருந்தது.

குறித்த கண்காட்சியில் விரிவுரைகள் நிகழ்தப் பட்டதோடு அல் அக்ஸா   மஸ்ஜித் கடந்து வந்த வரலாற்று நிகழ்வுகள், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் அதன் தற்போதைய நிலைமை மற்றும் குறிப்பாக அதனை நோக்கியும், பொதுவாக பாலஸ்தீனை நோக்கியிமுள்ள முஸ்லிம்களின் கடமை யாது? என்பவற்றை வெளிச்சமிட்டு காட்டும்  ஆவணப்படங்களும் அதன் போது காட்சிப் படுத்தப் பட்டன.

qatar2

 

qatar3

Web Design by Srilanka Muslims Web Team