கட்டாரில் உள்ள 22 இங்கை அமைப்புக்களுக்கு இங்கை தூதரகம் அவசர அழைப்பு - Sri Lanka Muslim

கட்டாரில் உள்ள 22 இங்கை அமைப்புக்களுக்கு இங்கை தூதரகம் அவசர அழைப்பு

Contributors
author image

Editorial Team

கட்டார் நாட்டில் உள்ள 22 இலங்கையர் அமைப்புகளுக்கு கட்டாருக்கான இலங்கைத் தூதரகம் அழைப்பு விடுத்துள்ளது.

கட்டார் நாட்டில் அவசர நிலை ஏற்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கட்டாருக்கான இலங்கைத் தூதுவர் லியனகே தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடல் புதன் கிழமை (14) இடம்பெறவுள்ளது.

மேலும், கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு உணவு மற்றும் தொழில் தொடர்பில் பிரச்சினை எதுவும் இல்லை எனவும் லியனகே குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சினதும் ஆலோசனைக்கு அமையவே தான் அனைத்து தீர்மானங்களையும் மேற்கொள்வதாக ஊடகம் ஒன்றுக்கு லியனகே தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் 0097455564936 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தன்னை தொடர்புகொள்ளுமாறும் அறிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team