கட்டாரில் பிலிப்பைன்ஸ் தொழிலாளர் ஒருவர் வீதியில் கிடந்த QR 50,000 பணம் மற்றும் QR 200.000 இலட்சம் காசோலையை பொலிசிடம் ஒப்படைத்தார். - Sri Lanka Muslim

கட்டாரில் பிலிப்பைன்ஸ் தொழிலாளர் ஒருவர் வீதியில் கிடந்த QR 50,000 பணம் மற்றும் QR 200.000 இலட்சம் காசோலையை பொலிசிடம் ஒப்படைத்தார்.

Contributors

-தமிழில் ஏ.எம்.அல்பிஸ்-

 

ஜெய்சன் கஸறிலோ (24) எனும் பிலிப்பைன்ஸ் தொழிலாளி கடந்த கிழமை வீதியில் கிடந்த கட்டார் உரிமையாளருக்கு சொந்தமான QR 50,000 பணம் மற்றும் QR 200.000 இலட்சம் காசோலை மற்றும் அப்பிள் கைத்தொலைபேசி என்பவற்றை கண்டெடுத்து கட்டார் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

கட்டாரில் இரண்டு மாதங்களாக உடற்பயிற்சி நிலையம் ஒன்றில் வரவேற்பாளராக வேலைபார்க்கின்ற இத் தொழிலாளி வேலைக்கு சென்று கொண்டிருக்கும் போது இப் பொதியை கண்டெடுத்துள்ளார்.

இத்தொழிலாளியினால் கண்டெடுக்கப்பட்ட பணப்பொதியானது கட்டாரில் இயங்கும் உள்ள ஒரு நிறுனத்தின் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கும் நோக்கத்திற்காக தான் வைத்ததாகவும் தனது இப் பணப்பை தொலைந்தது தனக்கு தெரிந்திருக்க வில்லை எனவும் தனது வாகனத்தை வீதிச் சுற்றுப் புறத்தில் திருப்பும் போது தற்செயலாக கதவு திறக்கப்பட்டு விழுந்திருக்கலாம் என்று வெட்கத்தில் பணப்பையின் உரிமையாளர் பொலிசாரிடம் தெரிவித்தார்.

இப் பணத்தை கண்டெடுத்தவரின் நேர்மையான செயற்பாட்டுக்கு கட்டார் பொலிசாரும் பணப்பையின் உரிமையாளரும் நன்றி செலித்தினர்.

இது தொடர்பாக இப்பணப்பையை கண்டெடுத்தவர் ஏழையாக இருக்கும் போதும் ஒரு நேர்மையான மனிதனாக இருக்க வேண்டும் என தனது பெற்றோர்கள் கற்றுக் கொடுத்துள்ளதாக இவர் தெரிவித்தார்.

இத்தொழிலாளியின் தந்தை தாய்வானில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது மாரடைப்பு வந்ததால் வீட்டிலேயே தங்கியுள்ளதாக இப் பிலிப்பைன்ஸ் தொழிலாளி மேலும் தெரிவித்தார்.

 

 

Web Design by Srilanka Muslims Web Team