கட்டாரில் வாழும் இலங்கையர் அச்சம்கொள்ள தேவை­யில்லை – கொழும்பிலுள்ள கட்டார் தூதரகம்

Read Time:3 Minute, 28 Second

தொழில் நிமித்தம் கட்­டாரில் வாழும் இலங்­கையர் அச்சம் கொள்ளத் தேவை­யில்லை என கொழும்­பி­லுள்ள கட்டார் தூத­ரகம் தெரி­வித்­துள்­ளது.“கட்­டாரில் வாழும் 150,000 இலங்­கை­யரை வெளி­யேற்ற தயார் நிலையில் அரசு” எனும் தலைப்பில் கட்­டா­ருக்­கான இலங்கை தூதுவர் ஏ. எஸ். பி. லிய­ன­கேவை மேற்கோள் காட்டி சில ஊட­கங்­களில் வெளி­யான செய்தி தொடர்­பாக இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் கட்­டா­ரி­லுள்ள இலங்கைத் தூத­ரகம் ஆகி­ய­வற்­றுடன் இலங்­கை­யி­லுள்ள கட்டார் தூத­ரகம் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்­டது.

அதன் போது அவர்கள் இந்த செய்தி தவ­றா­னது. தற்­போ­தய கள நில­வ­ரங்கள் குறித்து கட்­டாரில் வாழும் இலங்­கை­யர்கள் வீணாக அச்சம் கொள்­வ­தற்­கான எந்­த­வித நியா­யங்­களும் இல்லை என தெரி­வித்­தனர். சில வளை­குடா நாடுகள் கட்­டா­ரு­ட­னான தமது இரா­ஜ­தந்­திர உற­வு­களை முறித்துக் கொண்டு அந்­நாடு மீது விதித்­துள்ள முற்­றுகை அங்கு வாழும் வெளி­நாட்­ட­வர்கள் உட்­பட அனை­வரின் வழ­மை­யான வாழ்க்­கை­யிலோ அல்­லது அதன் பொரு­ளா­தார, வர்த்­தக உற­வு­க­ளிலோ எந்­த­வி­த­மான பாத­க­மான விளை­வு­க­ளையும் ஏற்­ப­டுத்­த­வில்லை என்­பதை கட்டார் அதி­கா­ரிகள் மீண்டும் மீண்டும் வலி­யு­றுத்தி உள்­ளனர்.

இவ்­வா­றான நெருக்­க­டி­யான நிலை­களை எதிர்கொள்­வ­தற்குத் தேவை­யான அனைத்து நட­வ­டிக்­கை­களையும் கட்டார் அரசு நீண்ட நாட்­க­ளுக்கு முன்பே மேற்­கொண்­டுள்­ளமை குறிப்­பிடத்தக்­கது.கட்டார் மீது விதிக்கப்பட்­டுள்ள தடைகள் அந்­நாட்டு பிர­ஜைகள் மற்றும் அங்கு வாழும் 150,000 இலங்­கையர் உட்­பட வெளி­நாட்­ட­வர்கள் அனை­வ­ரி­னதும் சாதா­ரண வாழ்க்­கையில் எந்த பாதிப்­பையும் ஏற்­ப­டுத்­த­வில்லை, மேலும் அதன் பொரு­ளா­தார, வர்த்­தக நட­வ­டிக்கைகள் மிகவும் சுமு­க­மாக மேற்­கொள்ளப் பட்டு வரு­கின்­றன என்­பதை கட்டார் தூத­ரகம் உறு­திப்­ப­டுத்து­கி­றது.

எனவே, இரு நாட்­டி­னதும் உத்­தி­யோக பூர்வ ஊடக அறிக்­கைகள் மற்றும் உறுதிப் படுத்தப் பட்ட பக்கசார்­பற்ற செய்­தி­களை வெளி­யி­டு­வதன் மூலம் மாத்திரமே இலங்கை -கட்டார் நட்பு உறவுகளை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்ல முடியும் என்பதை கட்டார் தூதரகம் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(நன்றி விடிவெள்ளி)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தோப்பூரில் நோன்புப் பெருநாள் வியாபாரம்
Next post மக்காவில் யாத்ரீகர்களுக்கு சஹர் உணவு ஏற்பாடு; மக்கா கவர்னர் உத்தரவு!