கட்டாருக்கான தடை: நடக்கப்போவது என்ன? - Sri Lanka Muslim
Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அஷ்ஷேய்க் பஸ்லுர் ரஹ்மான்


இன்று அதிகாலை எகிப்து உட்பட ஸஊதி, பஹ்ரைன், துபாய் ஆகிய மூன்று வளைகுடா நாடுகளும் ஒன்று சேர்ந்து கடாருடனான சகல ராஜதந்திர உறவுகளையும் துண்டித்துக் கொண்டன. 14 மணித்ததியாலங்களுக்குள் குறித்த நாடுகளில் இருந்து கடார் நாட்டுப்பிரஜைகளை வெளியேறும் படியும் கடாரில் இருந்து அந்நாடுகளின் பிரஜைகளை வெளியேரும் படியும் கட்டளையிட்டுள்ளன.

‘இந்நாடுகளின் இம்முடிவு முழு முஸ்லிம் உம்மத்தும் ஒன்றிணைந்து எதிர்;க்வேண்டிய கேவலமான நயவஞ்சகத்தனமான செயலாகும்;. ஸஊதியின் தலைமையில் யமனில் போராடும் கூட்டுப்படையில் இணைந்து போராடும் தன் சகோதர நாட்டுடன் இப்படியான முடிவை எடுத்ததற்கான காரணம் என்ன? இதன் மூலம் நன்மை அடையும் தரப்பினர் யார்? என்பது சிந்திக்க வேண்;டிய விடயமாகும்.

இஸ்ரேலை எதிர்த்துப் போராடும் ஹமாஸ் இயக்கத்திற்கு உதவி செய்வதும், காஸாவுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதும் அல்ஜஸீரா மூலம் அரபுலக செய்திகளை உண்மையானவடிவில் உலகறியச் செய்வதுமே கதார் செய்த தவறாகும்.

குறித்த நாடுகளின் கதாருடனான துண்டிப்பின் மூலம் பிராந்தியத்தில் நன்மையடையப் போவது இஸ்ரேல் மட்டுமே. இப்;போது ஒரு கேள்வி எழலாம். ஸஊதி உட்பட அரபு நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாய் செயற்படுமா? சந்தேகம் இல்லாமல் ஆம் என்பது தான் பதில். அமெரிக்க சூழ்ச்சியின் மூலம் கொள்ளப்பட்ட மன்னர் பைஸலின்; பின் வந்த அனைத்து சஊதி மன்னர்களும் ஈரானின் ஷீயா அரசும் இஸ்ரேல் நலன் காப்பதற்காகவேதான் பயன்படுத்தப்படுகின்றன.

கடாருக்கு நடக்கப்போவது என்ன? 14 மணித்தியாலங்களுக்குப் பின் குறித்த நாடுகள் கடாரிட்கு பல நிபந்தனைகளை விதிக்கும். அவற்றுள் முக்கியமானது கடார் துருக்கியுடன் தொடர்பைத் துண்டிக்க வேண்டும். கடாரில் உள்ள யூஸுப் அல்கர்ழாவி போன்ற அறிஞர்கள் வெளியேற்றப்பட வேண்டும். ஹமாஸ் ஆதரவாளர்கள் வெளியேற்றப்படல் வேண்டும். இரகசியமான முறையில் இஸ்ரேலைப் பாதுகாப்பதாக உறுதி வழங்கவேண்டும். என்பனவே அந்நிபந்தனைகளாகும்.
கடார் இணங்காது போனால் என்ன நடக்கும்?

கதாருக்கு எதிராக பொருளாதாரத் தடையை விதிக்கும். அல்லது இராணுவ நடவடிக்கை மூலம் ஆட்சிமாற்றத்தைக் கொண்டுவரும். இந்நிலையில் புவியியல் ரீதியாக நோக்கும் போது ஈரானைத் தவிர வேறு எந்த ஒரு நாடும் கடாருக்கு உதவும் நிலையில் இல்லை.
ஈரான் கடாருக்கு உதவுமா?

ஈரானின் பார்வையில் கடார் தனது எதிரியான சஊதியுடன் தோழமை கொண்ட ஒரு நாடு. யமனில் ஷியாக்களை எதிர்ப்பதற்காக சஊதியுடன் தோலோடு தோல்நின்று போராடும் நிலையில் எப்படி ஈரான் அதற்கு உதவி செய்யும். ஆம் தனக்கு பிராந்தியத்தில் ஏதும் நலன் கிடைக்கும் என்றால் நிச்சயம் உதவி செய்யும். ஈரானின் எதிர்பார்ப்பும் அதுதான்.
கடார் ஈரானுடன் சேருமா?

தன்னை நம்பியவர்களுக்கு ஸஊதி துரோகம் செய்து கொண்டே வந்துள்ளது. அவ்வாறு துரோகம் இழைக்கப்பட்டவர்களுள் ஸதாம் ஹுஸைனும் ஒருவர். ஆனால் கடார் அமீர் ஸதாமை விடவும் விவேகமானவர். முஸ்லிம்;களுக்குப் பயணுள்ளவர். எனவே இவர் முட்டாள் தனமாக செயற்பட மாட்டார்.

கடார் ஈரானுடன் சேர்ந்தால் நிச்சயமாக ஸஊதி அதன்மீது ஷீயாக் குற்றச்சாட்டை சுமத்தி முஸ்லிம்கள் மத்தியில் அதன் பெயரைக் கெடுக்கும். இந்நிலையைப் பார்க்கும் போது ஸஊதி வளைகுடா யுத்தமொன்றுக்கு மூன்றாவது அணியொன்றை வம்புக்கு இழுத்துள்ளது என்றே தோன்றுகிறது.

ஆம்! துருக்கி ஒருபோதும் கடாரை கைவிடப்போவதில்லை. ஏற்கனவே 4.4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதிக்கு துருக்கியிடம் இருந்து யுத்தக் கப்பல் ஒன்றை வாங்குவதற்கு சஊதி அதனுடன் ஒப்பந்;தம் செய்திருந்தது. அமெரிக்க அதிபர் சஊதிக்கு வந்தபோது அவர் 400 பில்லியனுக்கு ஆயுத ஒப்பந்தம் ஒன்றை சஊதியுடன் செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து ஸஊதி ஏற்கனவே துருக்கியுடன் செய்து கொண்ட ஒப்பந்;தத்தை முறித்துக் கொண்டது. இதன் மூலம் சஊதியுடனான துருக்கியின் உறவு பாதிக்கப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. யமன் யுத்தம் காரணமாக துருக்கியும் ஈரானைப் பகைத்துக் கொண்ட ஒரு நாடாகும். துருக்கி போன்ற ஒரு பெரிய நாடு கடாருக்காக ஒரு போதும் ஈரானின் நிபந்தனைகளுக்கு உடன்படப் போவதில்லை.

அத்துடன்
துருக்கி அதிபர் அர்தூகான் இன்றய யுகத்திற்குரிய சிறந்த அரசியல் வாதி. சிறந்த இராஜதந்திரி. உண்மையான அதேநேரம் விவேகமான இஸ்லாமிய வாதி. புவியியல் ரீதியாக ஈரானுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதன் மூலம் உயிர் பொருட்சேதமின்றி பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியும் எனின் நிச்சயம் அவர் அம்முடிவுக்குத்தான் வருவார். ஆனாலும் சிரிய விடயத்தில் துருக்கி நலனை அவர் ஈரானிடம் எதிர்பார்ப்பார். ஈரான் அதற்கு இணங்காவிட்டால்

நிச்சயம் துருக்கி கடாரைப் பாதுகாக்க தனது இராணுவப் பலத்தைப் பயன்படுத்தும். அப்போது மத்திய கிழக்கினுள் மூன்று அணிகள் யுத்தம் செய்து கொள்ளும். அமெரிக்கப் பின் புலத்தில் இயங்கும் சஊதி அணி, ரஷ்யப் பின் புலத்தில் இயங்கும் ஈரான் அணி. மூன்றாவது துருக்கியணி. மிகவும் சிக்கலான இப்பிரச்சினை அமெரிக்க அதிபரின் சஊதி இஸ்ரேல் நட்புறவுப் பயணத்தின் பின் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

நடக்கப் போவது என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். ஸுன்னி முஸ்லிம்கள் ஸஊதியைமட்டும் நம்புவார்களாயின் அது அமெரிக்காவை நம்பி மறுமையிலும் அவர்களுக்கு காலைவாறிவிடும். யாஅல்லாஹ் முஸ்லிம் உம்மத்தையும் புனிதஸ்தளங்;களையும் பாதுகாப்பதற்கு நீயே போதுமானவன்.

Web Design by Srilanka Muslims Web Team