கட்டார் கால்பந்து உலகக் கிண்ணத்தில் புதிய விதிகள்! - Sri Lanka Muslim

கட்டார் கால்பந்து உலகக் கிண்ணத்தில் புதிய விதிகள்!

Contributors

கட்டாரில் ஆரம்பமான பிஃபா உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் சில புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் உலகக் கிண்ணத்தில் முன்னர் காணாத ஐந்து விதி மாற்றங்கள் பின்வருமாறு,

விதி 01 – போட்டி ஒன்றில் ஐந்து மாற்று வீரர்கள் பயன்படுத்தப்படும் முதல் உலகக் கிண்ணமாக இது உள்ளது. போட்டி முழுவதிலும் மூன்று சந்தர்ப்பங்களில் இந்த மாற்று வீரர்களை பயன்படுத்த முடியும். இது அதிகமான திறமைகளைக் கொண்ட அணிகளுக்கு சாதகமானது.

விதி 02 – வழக்கமாக 23 வீரர்களைக் கொண்ட குழாமே இடம்பெறும் நிலையில் இம்முறை 26 வீரர்கள் கொண்ட குழாம் உலகக் கிண்ணத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

விதி 03 – தண்டனை உதையின்போது, கோல் காப்பாளர் கோட்டில் காலை வைத்திருக்க முடியும். இது உலகக் கிண்ணத்தில் முதல்முறை.

விதி 04 – பகுதி தானியங்கி ஓப்சைட் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது வீடியோ உதவி நடுவர் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் ஒன்றாக இருப்பதோடு ஓப்சைட் அழைப்பின்போது ஏற்படும் சராசரி நேரத்தை 70 விநாடியில் இருந்து 20 விநாடி வரை குறைக்கும்.

விதி 05 – ஆடவர் உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பெண் நடுவர்கள் இடம்பெறுவது இது முதல்முறையாகும்.

Web Design by Srilanka Muslims Web Team