கட்டியணைத்தல், முத்தமிடுதல் முற்றாக தடை! - Sri Lanka Muslim

கட்டியணைத்தல், முத்தமிடுதல் முற்றாக தடை!

Contributors

சவூதி அரேபியாவிலுள்ள பெண்களுக்கான மருந்தாக்கவியல் கல்லூரி ஒன்று அக்கல்லூரி மாணவிகளுக்கு முத்தமிடல், கட்டிணைத்தல் தொடுகை போன்ற செயற்பாடுகள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளதாக விநோதகரமான அறிவிப்பை கல்லூரி அறிவிப்புப் பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.

 

கல்லூரியின் தலைமை கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில் கட்டாயம் உரிய சீருடை அணிய வேண்டும், கல்லூரி அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும், வகுப்புகளுக்கு பின்னர் ஆய்வுகூடங்களில் இருக்கக் கூடாது என்பதுடன் இந்த விதிகளை ஏற்றுக்கொள்ளவும் இல்லையெனில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த அறிவிப்பினை பார்த்து ஆத்திரமடைந்த மாணவர்கள் குறித்த அறிவிப்பின் பிரதியில் ‘இது முட்டாள்தனமா அல்லது பைத்தியகாரத்தனமா?’ என எழுதி அதனை கல்லூரி நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக சவூதி பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team