கட்டுநாயக்காவில் முஸ்லிம் வியாபாரியின் கடையில் தேரர்கள் பிரித் ஓதி அட்டகாசம் - Sri Lanka Muslim

கட்டுநாயக்காவில் முஸ்லிம் வியாபாரியின் கடையில் தேரர்கள் பிரித் ஓதி அட்டகாசம்

Contributors

கட்­டு­நா­யக்க சுதந்­திர வர்த்தக வல­யத்தில் உள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒரு­வ­ருக்கு சொந்த­மான அழ­கு­சா­தனப் பொருட்­களை விற்­பனை செய்யும் கடையில் புத்­தரின் உருவ சித்­திரம் கொண்ட கையு­றை­களை விற்­ப­னைக்­காக வைத்­தி­ருந்­தமை தொடர்­பாக ஆத்­திரம் கொண்ட பௌத்த தேரர்கள் மற்றும் பொது மக்கள் முஸ்லிம் கடையில் பிரித் ஓதி வியா­பா­ரியை பொது­மன்­னிப்பு கோரச் செய்த சம்­பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்­பாக மேலும் தெரிய வரு­வ­தா­வது.
கட்­டு­நா­யக்க சுதந்­திர வர்த்தக வல­யத்தில் அமைந்­துள்ள குறித்த வர்த்­தக நிலை­யத்தில் பெண்கள் அணியும் நீண்ட கையு­றை­களில் புத்­தரின் உருவ சித்­திரம் இருந்­துள்­ளது. இந்த கையு­றையை அணிந்தால் கைகளில் பச்சை குத்­தி­யது போல் தெரியும்.
இது தொடர்­பாக அறிந்து கொண்ட பௌத்த மத­கு­ருக்கள் உட்­பட சிலர் அண்­மையில் இந்த கடைக்குச் சென்று ஏற்­ப­டுத்­திய பிரச்­சி­னையை அடுத்து அந்த கடையை சில தினங்­க­ளுக்கு மூட வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது.
இந்­நி­லையில், கடந்த சனிக்­கி­ழமை வர்த்­தகர் கடையை மீண்டும் திறக்க முற்பட்ட போது பௌத்த தேரர்கள் மற்றும் பொது மக்கள் கொண்ட குழு­வினர் அந்த முஸ்லிம் கடையின் முன்­பாக பிரித் ஓதும் ஒலி நாடாவை ஒலிக்­க­விட்­டனர். இதன் போது அந்த கடை­யிலும் அய­லிலும் பௌத்த கொடிகள் பறக்­க­வி­டப்­பட்­டமை ஒலி­பெ­ருக்கி மூல­மாக அறி­விப்பு செய்­யப்­பட்­ட­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.
அதன் பின்னர் அந்த வர்த்­தக நிலையம் திறக்க அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளது. இதில் கலந்து கொண்ட பிக்­கு­களும் பொது மக்கள் சிலரும் பின்னர் அரு­கி­லுள்ள விகா­ரைக்குச் சென்­றனர்.
இது தொடர்பில் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே இந்த சம்பவம் இடம்பெற்றது. இந்த எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டவர்கள் பொது பலசேனா அமைப்பினர் என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். (v)

Web Design by Srilanka Muslims Web Team