போட்டோ கிராபருக்கு முகத்தை காட்டியதால் சவூதியில் இடம்பெற்ற விவாகரத்து - Sri Lanka Muslim

போட்டோ கிராபருக்கு முகத்தை காட்டியதால் சவூதியில் இடம்பெற்ற விவாகரத்து

Contributors
author image

World News Editorial Team

சவுதி அரேபியாவின் மதினா நகரை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. அதற்கு முன்பு அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துக்கொள்ள வில்லை.

 

இந்த நிலையில் திருமணம் நடந்த அன்று இரவு மணமகனும், மணமகளும் நேருக்கு நேர் முகம் பார்க்கும் சடங்கு நடந்தது. அப்போது போட்டோ எடுக்கப்பட்டது.

 

அப்போது போட்டோ கிராபர் மண மகளிடம் முகம் காட்டும்படி கூறினார். உடனே அவரும் சிரித்தபடி பர்தாவை விலக்கிவிட்டு போட்டோவுக்கு முகம் காட்டினார். இதனால் மணமகன் கடும் எரிச்சலும், ஆத்திரமும் அடைந்தார்.

 

 போட்டோவுக்கு போஸ் கொடுப்பதா என கோபமடைந்தார். உடனே, அந்த மணமகளை அன்று இரவே விவாகரத்து செய்தார்.

 

இதனால் திருமணத்துக்கு வந்த உறவினர்களும்,. மணமகளும், கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த பிரச்சினையை தீர்த்து விவாகரத்தை நிறுத்த முயன்றனர். ஆனால் முடியவில்லை. விவாகரத்து நடந்து முடிந்து விட்டது. 

 

Web Design by Srilanka Muslims Web Team