கண்டி மாவட்ட சமாதான நீதவான் அமைப்பு ரவூப் ஹக்கீம் தலைமையில் - Sri Lanka Muslim

கண்டி மாவட்ட சமாதான நீதவான் அமைப்பு ரவூப் ஹக்கீம் தலைமையில்

Contributors

(JM.Hafeez)

கண்டி மாவட்டத்தில் சமாதான நீதவான்களது அமைப்பு ஒன்று நீதியமைச்சர் றவூப் ஹகீம் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது.
‘கண்டி மாவட்ட சமாதான நீதவான்களின் சுதந்திர சங்கம் ‘ என்றமேற்படி மைப்பு கண்டி புஸ்பதன மண்டபத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது
இந்நிகழ்வு நீதி அமைச்சர் கௌரவ ரவூப்ஹகீம் அவர்கள் முன்னிலையில் உருவாக்கப்பட்ட யாப்பு ஒன்றும் பொதுசபையில் அங்கீகரிக்கப்பட்டதுடன், அன்று  820 சமாதான நீதவான்கள் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து  கண்டி அருப்பொல முதலாம் குறுக்கு வீதியில் சங்கத்திற்கான காரியாலயம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டது. முதலாவது நிர்வாக சபை கூட்டமும் நடைபெற்றது.இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒன்றாக கண்டி மாவட்டத்தில் 3000 அங்கத்தவர்கள் சேர்த்துக்கொள்ளவம் முடிவானது. இந்த அமைப்பின் கீழ் அகில  மாவட்டம் தோறும் மொத்தம் 30000 சமாதான நீதவான்ளை அங்கத்தவர்களாக  இணைத்க்கொள்ளப்பட உள்ளது.
அமைப்பின் போசகராக தொடம்வள தம்மரத்ன அனுனாயகே தேரோ அவர்களும் தலைவராக அமைச்சின் பொதுசனத்தொடர்பு அதிகாரி மஹிலால் சில்வா அவர்களும் பொதுசெயலாளராக கடற்படை அதிகாரி ஹேரத் ஜயரத்ன அவர்களும் பொருளாளராக வை.எம்.எம்.எ .யின் பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.றிஸ்மி அவர்களும் பொதுசபையில் தெரிவு செய்யப்பட்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team