கண்ணுக்குத் தெரியாத படுகுழிக்குள் விழுந்து கொண்டிருக்கும் இலங்கை - மங்கள..! - Sri Lanka Muslim

கண்ணுக்குத் தெரியாத படுகுழிக்குள் விழுந்து கொண்டிருக்கும் இலங்கை – மங்கள..!

Contributors

இலங்கை வரலாற்றில் சுதந்திரத்துக்குப் பின்னர் அந்நிய செலாவணி கையிருப்பு மிகவும் வீழ்ச்சியடையும் சந்தர்ப்பமாக இதைக் கருத வேண்டுமெனத் தெரிவித்த முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, கண்ணுக்குத் தெரியாத படுகுழிக்குள் இலங்கை விழுந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

2019ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி நிதி அமைச்சராக இருந்து தான்  பதவி விலகிய போது மத்திய வங்கியின் அந்நிய செலாவணி கையிருப்பு 7.6 பில்லியன் டொலர்களாக இருந்ததாகவும் அந்த தொகை எதிர்வரும் நாட்களில் 2.6 பில்லியன் டொலர்களாக வீழ்ச்சியடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கி வரலாற்றிலேயே நினைத்துப் பார்க்க முடியாத அளவு பணத்தை 

இந்த அரசாங்கம், கடந்த வருடம் அச்சிட்டுள்ளதாகத் தெரிவித் அவர், கடந்த ஆண்டில் தேசிய வருமானம் சுமார் 600 பில்லியன் டொலர்களாகக் குறைந்துவிட்டது என்றும் குறிப்பிட்டார்.

Web Design by Srilanka Muslims Web Team