கத்தருடனான தொடர்பு துண்டிப்பு: இதுவரையிலான முக்கிய updates - Sri Lanka Muslim

கத்தருடனான தொடர்பு துண்டிப்பு: இதுவரையிலான முக்கிய updates

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Source: www.aljazeera.com
Thanks- A Rahuman


5:50am – கத்தருடனான தொடர்பு துண்டிக்கப்படுகிறது. 48 மணி நேரத்துக்குள் கத்தர் அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென பஹ்ரைனின் வெளியுறவுத்துறை அறிவித்தது.

6am – கத்தருடனான தொடர்பு துண்டிக்கப்படுவதாகவும் யெமன் தாக்குதலில் பங்குகொண்டிருக்கும் கத்தர் படைகள் விலக்கப்படுவதாகவும் சவூதி நியூஸ் ஏஜன்ஸி மூலம் சவூதி அறிவித்தது.

6:10am – துபை மற்றும் எகிப்து நியூஸ் ஏஜன்ஸிகள் மூலம் அந்நாடுகள் கத்தருடனான உறவு துண்டிப்பு செய்தியினை அறிவித்தன.

8:35am – அபுதாபியிலிருந்து இயக்கப்படும் யு ஏ இ விமானமான எதிஹாத், மறு அறிவிப்பு வெளியாகும் வரை ஜூன் 6 லிருந்து கத்தருக்குச் செல்லும் அனைத்து எதிஹாத் சர்வீஸ்களையும் ரத்து செய்வதாக அறிவித்தது.

9:55am – நான்கு அரபு நாடுகளின் திடீர் முடிவுக்கு எதிராக கத்தர் அரசின் அதிகாரப்பூர்வ செய்தி வெளியானது.
அதில், கத்தரின் இறையாண்மைக்கு எதிரான தாக்குதல் எனவும் கத்தருக்கு எதிராகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை எனவும் தெரிவித்ததோடு, அந்நாடுகளின் இம்முடிவு கத்தர் மக்களை எவ்வகையிலும் பாதிக்கப்போவதில்லை என தெரிவித்தது.

10am – அரபு நாடுகள் மீண்டும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டுமெனவும் தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்துக்கு இச்சூழல் எவ்வகையிலும் உதவாது எனவும் அமெரிக்க செயலாளர் ரெக்ஸ் சிட்னியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மத்திய கிழக்கு நாடுகளில் மிகப் பெரிய அமெரிக்க இராணுவ தளம் கத்தாரில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

10:20am – துபையிலிருந்து இயங்கும் எமிரேட்ஸ் விமான சர்வீஸ்கள் அனைத்தும் ஜூன் 6 லிருந்து நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

10:45am – சவூதியின் அறிவிப்பைப் பின்பற்றி கத்தருடனான தொடர்பைத் துண்டிப்பதாக, சர்வதேச ஆதரவு பெற்ற அதிகாரப்பூர்வ யெமன் அரசு அறிவித்தது. யெமனிலுள்ள பயங்கரவாதக் குழுக்களுக்குத் தம்மிடையிலான முந்தைய தீர்மானங்களுக்கு விரோதமாக கத்தர் அரசு ஆதரவு கொடுப்பதால் இத்தீர்மானம் எடுத்ததாக தம் அறிவிப்பில் யெமன் அதிபர் அபத் ரபோ தெரிவித்தார்.

11:05am – துபையின் பட்ஜட் விமானமான ஃப்ளை துபை ஜூன் 6 முதல் கத்தருக்கான அனைத்து சர்வீஸ்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது.

12:10pm – சவூதி அரசின் விமானமான சவூதியா, கத்தருக்கான அனைத்து சர்வீஸ்களும் உடனடியாக ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது.

1:15pm – துபையின் மற்றொரு பட்ஜெட் விமானமான ஏர் அரேபியா ஜூன் 6 முதல் மறு அறிவிப்பு வெளியாகும்வரை கத்தருக்கான அனைத்து சர்வீஸ்களும் ரத்துசெய்யப்படுவதாக அறிவித்தது.

1:20pm – கத்தருடான தொடர்பில் எவ்வித மாற்றமும் இல்லை என ஃபிஃபா கால்பந்து மேலாண்மை துறை அறிவித்தது. மேலும், கத்தர் 2022 ஃபிஃபா கால்பந்துக்கான கத்தர் ஒருங்கிணைப்பு குழுவுடன் பேசியதாகவும் 2022 ஃபிஃபா உலகக் கால்பந்து கோப்பை விசயத்தில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்தது.

1:30pm – சவூதி சாலைவழி எல்லை மூடப்பட்டதால் கத்தருக்குள் வரவிருந்து ட்ரக்குகள் சவூதி எல்லையில் நீளமாக குவிந்தன.

2:50pm – லிபியாவில் செயல்படும் மூன்று போட்டி அரசுகளில் ஒன்றான கலிஃபா ஹப்தாரின் அரசு, கத்தருடனான தொடர்பைத் துண்டித்ததாக அறிவித்தது. ஹஃப்தாரின் வெளியுறவுதுறை அமைச்சர், கத்தர் தீவிரவாதத்தை வளர்ப்பதாக குற்றம்சாட்டினார்.

3:10pm – 48 மணி நேரங்களுக்குள் கத்தர் அதிகாரிகள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டுமெனவும் கத்தரிலுள்ள தம் நாட்டு அதிகாரிகளைத் தாம் திரும்ப அழைத்துள்ளதாகவும் எகிப்து வெளியுறவுத் துறை அறிவிப்பு வெளியானது.

3:15pm – தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கத்தருடனான தொடர்பைத் துண்டிப்பதாக மாலத்தீவு அறிவித்தது.

3:30pm – அரபு நாடுகளிடையிலான பகைமை சூழல் சரியல்ல எனவும் ஒற்றுமைக்கான பேச்சுவார்த்தைக்குத் தயாராக வேண்டுமெனவும் ஈரான் அழைப்பு விடுத்தது.

3:30pm – கத்தருக்குச் செல்லும் கத்தர் கொடி கொண்ட அனைத்து கப்பல்களுக்கும் தடை விதிப்பதாக துபையிலுள்ள ஃபுஜைரா துறைமுகம் அறிவித்தது. கத்தரிலுள்ள துறைமுகத்திற்கு துபை துறைமுகங்கள் வழியே கப்பல்கள் வந்து செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கத்தருக்கு இதுவரை சர்வதேச துறைமுக வசதி இல்லை. தற்போது ஹமத் சர்வதேச துறைமுகம் என்ற பெயரில் புதிய துறைமுகம் கட்டுமானப் பணிகள் கத்தரில் நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

4pm – இரானிய விவசாயப் பொருட்கள் ஏற்றுமதி யூனியன் தலைவர், 12 மணி நேரங்களுக்குள் இரானிய உணவு கப்பல்கள் கத்தர் துறைமுகத்தை வந்தடையும் என அதிரடி அறிவிப்பு வெளியிட்டார்.

4:40pm – நிலைமைக்கு துருக்கி கவலை தெரிவித்தது. நம்முடைய ஒற்றுமைக்கு அரபு நாடுகளின் ஒத்துழைப்பும் ஒருங்கிணைவும் தேவை என்று துருக்கி வெளியுறவுதுறை அமைச்சர் கூறியதோடு, பிரச்சனையைச் சுமூகமாக தீர்ப்பதற்காக எல்லா உதவிகளையும் செய்யத்தயாராக இருப்பதாகவும் அறிவித்தார்.

5:10pm – நாட்டின் பாதுகாப்பு கருதி கத்தருக்கான வான் மற்றும் நீர்வழி தொடர்புகள் அனைத்தையும் துண்டிப்பதாக எகிப்து வெளியுறவுத்துறை அறிவித்தது.

5:40pm – கத்தர் கொடிகளைத் தாங்கி வரும் கத்தர் கப்பல்களுக்கு சவூதி அரசு தடை விதித்தது.

6:25pm – சவூதியிலுள்ள அல் ஜஸீரா ஊடகத்துறை அலுவலகத்தை சவூதி அரசு மூடியது.

6:30pm – கத்தருக்கு எதிரான நகர்வை இஸ்ரேல் வரவேற்றது. இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் லிபர்மேன் கூறும்போது, தீவிரவாதத்துக்கு எதிரான நகர்வுக்கு இது பல சாத்தியமான வழிகளைத் திறக்குமென்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனத் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team