கத்தாரில் அலிகாரின் பழைய மாணவர்களின் ஒன்றுகூடலும் , டீசேட் அறிமுக நிகழ்வும் 2017 - Sri Lanka Muslim

கத்தாரில் அலிகாரின் பழைய மாணவர்களின் ஒன்றுகூடலும் , டீசேட் அறிமுக நிகழ்வும் 2017

Contributors
author image

முஸாதிக் முஜீப்

கத்தாரில் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் 105 ஆவது ஆண்டு நிறைவையொட்டி பழைய மாணவர்களின் ஒன்றுகூடலும் , டீசேர்ட் அறிமுக நிகழ்வும் கட்டார் அலிகாரியன்ஸ் ஏற்பாட்டில் , ERAVUR ASSOCIATION OF QATAR ன் இணை அனுசரணையுடன் கடந்த 12.05.2017 ஆம் திகதி கத்தார் பீனிக்ஸ் தனியார் பாடசாலை அரங்கில் இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வுகளுக்கு விசேட அதீதிகளாக ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் பிரதி அதிபர் தௌபீக் ஆசிரியர் அவர்களும், உப அதிபர் அப்துல் மஜீத் ஆசிரியர் அவர்களும்மற்றும் ஏறாவூர் அலிகார் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் அப்துல் வாஜித் இஸ்லாஹி அவர்களும் நாட்டிலிருந்து அழைக்கப்பட்டிருந்தமையும் விசேட அம்சமாகும். அத்துடன் ERAVUR ASSOCIATION OF QATAR அமைப்பின் தலைவர் அஷ் செய்க் ஹிஜ்ரத், கட்டார் அவ்காப் இமாம் அஷ் செய்க் அன்சார் , தொழிலதிபர் இர்ஷாத் , SLIC யின் முன்னால் தலைவர் சகோ அமானுல்லாஹ், SLMQ யின் உறுப்பினர் சகோ. ஹாஸிம் ஹம்ஸா ஆகியோரும் இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் இந்நிகழ்வில் கட்டார் அலிகார் பழைய மாணவர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இனாயத் அவர்கள் வரவேற்புரை வழங்க, கட்டார் வாழ் ஏறாவூர் அலிகாரியன்களின் பல்வேறு கலைநிகழ்சிகள் அரங்கேற்றப்பட்டதுடன் பிரதம அதிதிகளில் ஒருவரான தௌபீக் ஆசிரியர் அவர்களின் உணர்வுபூர்வமான உரையும்,அப்துல் மஜீத் ஆசிரியர் அவர்களின் அனுபவ பகிர்வும், அப்துல் வாஜித் இஸ்லாஹி அவர்களின் பழைய மாணவர்கள் சங்கத்தின் இலக்குகள், திட்டங்கள்பற்றிய விளக்க உரையும் இடம்பெற்றிருந்தது. அழைப்பை ஏற்று நிகழ்வுக்கு வருகை தந்திருந்த அதீதிகளுக்கான டீ ஷேட் வழங்கும் வைபவமும் இடம்பெற்றது . அத்துடன் நிகழ்வில் கலந்து சிறப்பித்த விசேட அதீதிகளுக்கும் பாடசாலைக்கும் நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டது .

நிகழ்வின் இறுதியாக மிகவும் சுவாரசியமாகவும், அழகாகவும் வடிவமைக்கப்பட்டிருந்த இந்நிகழ்வுகள் சிறப்பாக இடம் பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தவர்களுக்கும், அதிதிகளாக கலந்து கொண்டிருந்தவர்களுக்கும் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்த கட்டார் வாழ் ஏறாவூர் அனைத்து அலிகாரியன்களுக்கும் ஏற்பாட்டுக் குழு சார்பில் ஒரைங்கிணைப்பாளர்களில் ஒருவரான S.L. நஸீர் அவர்கள் நன்றியுரை வழங்கியிருந்தார்.

q q.jpg2 q.jpg2.jpg3

Web Design by Srilanka Muslims Web Team