கத்தாரில் உள்ள லக்பிம மற்றும் கொழும்பு உணவகங்கள் தொடர்பில் அதிர்ச்சி ரிப்போட் (முழு விபரம் இணைப்பு) - Sri Lanka Muslim

கத்தாரில் உள்ள லக்பிம மற்றும் கொழும்பு உணவகங்கள் தொடர்பில் அதிர்ச்சி ரிப்போட் (முழு விபரம் இணைப்பு)

Contributors
author image

Editorial Team

கத்தாரிலிருந்து விஷேட புலனாய்வு செய்தியாளர்


கத்தார் நாட்டில் உள்ள இலங்கை – காத்தான்குடி  நபர்களுக்குச் சொந்தமான ஏசியன் டவுனில் உள்ள “கொழும்பு ரெஸ்டூரன்ட்” பெப்ரவரி 28 முதல் அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்கு இழுத்து மூடப்பட்டுள்ளது.

கத்தார் நாட்டில் பலதியா (மாநகச சபை) இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளதுடன் சீல்வைத்தும் உணவகத்தை மூடியுள்ளது.

கத்தார் நாட்டில் இலங்கை முஸ்லிம்கள் உட்பட பலநாட்டவர்களிடம் பிரசித்து பெற்று விளங்கும் கொழும்பு ரெஸ்டூரன்ட் திடீரென இழுத்து மூடப்பட்டமை பலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உணவகம் திடீரென மூடப்பட்டமை தொடர்பில் பலரும் பல சந்தேகங்களை வெளிப்படுத்தத் தொடங்கினர். சிலரின் சந்தேகங்கள் அருவருப்பாகவும் அதிர்ச்சியூட்டுபவையாகவும் இருந்ததை தொடர்ந்து, கத்தாரில் உள்ள இலங்கை வாழ் சமுகத்தினரின் விசேட வேண்டுகோளுக்கு அமைய சிறிலங்கா முஸ்லிம்ஸ் இணையத்தள கத்தார் செய்தியாளரை உடன் கத்தாரில் உள்ள குறித்த   இடத்திற்கு அனுப்பி வைத்திருந்தோம்.

அதன் படி அவர் அங்கிருந்து தரும் அதிர்ச்சித் தகவல்கள் இதோ ….

கத்தாரில் தொழில் புரியும் நபர் ஒருவர் மேற்சொன்ன கொழும்பு உணவகத்தில் கொத்து அல்லது வேறு வகை உணவொன்றை  பெற்று உண்டு கொண்டிருக்கும் பொழுது அதுக்குள் இருந்து  எலிக் குட்டி வெளிப்பட்டுள்ளது.

இதனால் பெரும் அதிர்ச்சியும் ஆவேசமும் கொண்ட அந்த  நபர், உடனடியாக கத்தார் மாநகர சபைக்கு அறிவித்துள்ளார். ஸ்தலத்திற்கு விரைந்த மாநகர சபை அதிகாரிகள் கொத்தை பார்வையிட்டு எலிகள் இருப்பதை உறுதி செய்ததுடன் அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்கு உணவகத்தை திறக்க முடியாது என அறிவித்து உத்தியோகபூர்வ சீலையும் வைத்துள்ளனர்.

எலிக் குட்டியுடனான கொத்தை அல்லது உணவை உண்ட ஒருவர் கத்தார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக  தெரியவருகின்றது.

கொழும்பு உணவகத்தில் இவ்வாறு எலிக் குஞ்சு சேர்த்து உணவு பரிமாறுவது தற்போதுதான் தவறுதலாக இடம்பெற்றதா என எமது புலனாய்வை திசை திருப்பிய போது மேலும்  அதிர்ச்சித் தகவல்கள் எமக்கு கிடைக்கப் பெற்றன.

இந்த உணவக உரிமையாளர்களுக்கு சொந்தமாக கத்தார் – செனயா பிரதேசத்தில் கொழும்பு உணவகம் என்னும் மற்றுமொரு கிளையும் உள்ளது. அந்தக் கிளையில் மேற்படி 28ம் திகதி இந்தச் சம்பவம் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, அங்கு பரிமாறப்பட்ட உணவிலும் கரப்பத்தான் பூச்சி காணப்பட்டு அந்த உணவகத்திற்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

கத்தார் டோகாவிலிருந்து செனயா பிரதேசமானது பல மைல்களை தூரமாகக் கொண்டது. அதனால் அந்த உணவகத்தில் இடம்பெற்ற கரப்பத்தான் உணவுப் பிரச்சினை கத்தாரில் உள்ள இலங்கை வாழ் மக்களிடத்திலும் ஏனைய வெளிநாட்டவர் மத்தியிலும் தகவல் சரியாக சென்றடையவில்லை.

எலிக் கொத்துச் சம்பவத்தின் பிற்பாடும் எமது புலனாய்வுச் செய்தியாளரின் திடீர் விஜயத்தினை அடுத்துமே மேற்படி விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது.

எலிக் கொத்து மற்றும் கரப்பத்தான் உணவு தொடர்பில் எமது புலனாய்வை விரிபுபடுத்திக் கொண்டு சென்ற போது கொழும்பு உணவகத்தின் உரிமையாளர்கள் யார் என்ற உண்மையும் தெரியவந்தது.

இன்னும் நாம் சற்று ஆராய்ந்த போது, கத்தாரில் பிரசித்தி பெற்று விளங்கும் மற்றுமொரு உணவகமான லக்பிம எனும் உணவகத்தின் சொந்தக் காரர்களும் இவர்கள் தான் என்பதும் வெளிச்சத்திற்கு வந்தது.

லக்பிம உணவகத்தில் கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் எலி அல்லது மனித நகம் அங்கு பரிமாறப்பட்ட உணவில் கண்டறியப்பட்டது. நகம் கிடந்த உணவை உட்கொண்ட இலங்கை, கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் உடன் மாநகரசபைக்கு அறிவித்ததனை அடுத்தே பலதியா அதிகாரிகளால் சுமார் ஒரு மாத காலத்திற்கு லக்பிம உணவகம் மீது 35 ஆயிரம் றியால்களை தண்டமாக விதித்து ஒரு மாதகாலத்திற்கு இழுத்து மூடவும் செய்ததாக  சிலர் தெரிவித்தனர்.

அதுமட்டுமன்றி கடந்த 03 மதாங்களுக்கு முன்பதாக மற்றுமொரு அதிர்ச்சியூட்டும் சம்பவமும் இந்த லக்பீம உணவகத்தில் இடம்பெற்றுள்ளமை  அறியவந்தது.

கத்தார் நாட்டு சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில், அங்குள்ள குளிச்சாதனப் பெட்டிக்குள்ளிருந்து  காலவதியாகிப் போன பல கிலோ கோழி இறைச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டு பல ஆயிரம் றியாழ்கள் தண்டம் விதிக்கப்பட்டு சில வாரங்கள் இழுத்து மூடப்பட்டமை தொடர்பில் தெரியவந்தது.

கொழும்பு உணவகம் மற்றும் லக்பிம உணவகங்களில் இவ்வாறான சம்பவங்கள் பல தடவைகள் இடம்பெற்றமை தொடர்பில் இதன் பிற்பாடு எமது அவதானத்தை செலுத்தினோம். அப்போது தான் மேற்சொன்ன பிரச்சினைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு மிகப்பாரிய பிரச்சினையொன்று இருப்பது கண்டறியப்பட்டது.

மேற்படி இரு உணவகங்களுக்குமான கோழி இறைச்சிகளை கத்தார் நாட்டில் உள்ள ‘சாதியா கோழி இறைச்சி’ எனும் பிரேசில் நாட்டு நிறுவனத்திற்கு சொந்தமான நிறுவனத்திலிருந்தும் பெற்றுக் கொள்வது தெரியவந்தது.

உலகப் பிரபல்யம் பெற்ற சாதியா கோழி இறைச்சி நிறுவனத்திற்கும் – கொழும்பு மற்றும் லக்பிம உணவகத்திற்குமிடையிலான தொடர்பு என்ன என்பது குறித்து  அவதானம் செலுத்தப்பட்டது.

அதன் படி சாதியா கோழி இறைச்சி நிறுவனத்தில் கடமைபுரியும் இலங்கையைச் சேர்ந்த இளைஞரை பின்தொடர ஆரம்பித்தோம். 

அப்போது அங்கிருந்து ஒரு அதிர்ச்சியான தகவலொன்று எமக்கு கிட்டியது. அந்த நிறுவனம் காலாவதியாவதற்கு அண்மித்தமாக இருக்கின்ற கோழி இறைச்சிகளை 60 – 80 வீதமான விலைக்கழிவுடன் விற்பனை செய்வது தெரியவந்தது. இது வழமையான விற்பனை முறையாகும். அன்றன்று சமையல் புரிகின்றவர்களுக்காகவே இந்த திட்டம் பொருத்தமானது.

ஆனால் மேற்சொன்ன இரு உணவகங்களும் இந்த விலைக்கழிவை பயன்படுத்தி கோழி இறைச்சிகளை பெற்று அவை சமைக்கப்பட்டு விற்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.

அந்தக் கோழிகளை  உணவகங்களில் கொண்டு வந்து சேமித்து  வைத்திருக்கும் சூழ்நிலையில் கரப்பான்களும் எலிக்குட்டிகளும் குறித்த கோழி இறைச்சிக்குள் உட்புகுந்திருக்கலாம் என பிரபல சமையலாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

அந்த அடிப்படையில் தான் மேற்படி உணவகங்களில் பரிமாறப்பட்ட உணவுகளில் இப்பிரச்சினைகள் அடிக்கடி எழும்புவதற்கு காரணியாக அமைந்திருக்கலாம் என சுட்டிக் காட்டப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க கொழும்பு மற்றும் லக்பிம உணவகங்கள் கத்தார் நாட்டில் மட்டும் 07 இடங்களில் அமையப்பெற்றுள்ளன. இந்த 07 உணவகங்களிலும் உணவருந்தச் செல்பவர்களுக்கு போத்தலில் அடைக்கப்பட்ட குடீநீரே பருக வேண்டும் என அங்கு எழுதப்படாத சட்டமாக அறிவுருத்தப்படுகின்றது.

ஒரு தண்ணீர் போத்தலின் விலை 0.40 றியால்களாகும். ஆனால் இந்த உணவகங்களில் ஒரு போத்தலுக்கு – 01 றியால் அறவிடப்படுகின்றது. இவ்வாறாக 07 உணவக கிளைகளிலும் பல ஆயிரம் தண்ணீர் போத்தல்கள் தினமும் விற்பனை செய்யப்படுகின்றன. இதனாலும் பல ஆயிரம் றியாழ்களை இந்த உணவக உரிமையாளர்கள் பெற்று வருகின்ற தகவலும் கத்தார் நாட்டில் உள்ள தொழிலாளர்களால் எமக்கு தெரியப்படுத்தப்பட்டது.

கொழும்பு மற்றும் லக்பிம உணவகங்கள் தொடர்பில் நாம் இந்தளவு தூரம் அவதானத்தை செலுத்தியமைக்கு காரணங்களும் இல்லாமல் இல்லை.

இலங்கை போன்ற பல வறுமைப்பட்ட நாடுகளிலிருந்து பெரும் கஷ்டத்திற்கும் போராட்டத்திற்கும் கடன் சுமைகளுக்கும் மத்தியில் கத்தார் நாட்டுக்கு வேலை வாய்ப்புக்காகச் செல்லும் முஸ்லிம்கள்; மற்றும் ஏனைய மதத்தவர்களின் மூன்று நேர உணவுத் தேவையை தீர்த்து வைக்கும் உணவகங்களாக மேற்படி உணவகங்களின் 07 கிளை நிறுவனங்களுமே பெரும் பங்கை வகிக்கின்றன. இந்த உணவகங்களை கத்தாரில் உள்ள எமது சகோதரர்கள் பெரும் சேவையாகவே கருதி வருகின்றனர்.

தொழிலாளர்கள் நல்நோக்கம் கொண்டு செல்லும் இவ் உணவகங்களில் இவ்வாறான  உணவுகள் இனிவரும் காலங்ககளில் பரிமாறப் படக்கூடாது என்ற நல்நோக்கத்தினாலேயே இந்த விசேட ஆய்வை நாம் மேற்கொண்டிருந்தோம்.

கொழும்பு – லக்பிம உணவகங்களில் உள்ள ஊழியர்கள் எதிர்நோக்கும் சம்பள மற்றும் விடுமுறைப் பிரச்சினைகள் தொடர்பில் பல தகவல்கள் எமக்கு கிடைக்கப் பெற்ற போதிலும் அது தொடர்பில் இந்த இடத்தில் எதுவும் நாங்கள் சுட்டிக் காட்டவிரும்பவில்லை.

மேற்சொன்ன உணவுப் பிரச்சினை இனிவரும் காலங்களில் சீர்படுத்தப்படாத பட்சத்தில் ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் மேலும் எமது அவதானத்தை செலுத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு உள்ளாகுவோம் என்பதை சுட்டிக் காட்டுகின்றோம்.

ஹறாமான உழைப்புக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுவோம். அல்லாஹ்வின் இறுதித் தீர்ப்புக்கு அனைவரும் அஞ்சுவோம்.

(ஊரின் பெயர்களை குறிப்பிட வேண்டாம் என சில வாசகர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவை நீக்கப்பட்டுள்ளன )

 b2 b3 b6 b55 b77 b258 b888

b

q q2 q3 q4 q5 q6 q7 q76 q99 q3333 

Web Design by Srilanka Muslims Web Team