கத்தாரில் சவுதி உட்பட ஏனைய அரபு நாடுகளின் பொருட்களுக்கு வலை வீச்சு » Sri Lanka Muslim

கத்தாரில் சவுதி உட்பட ஏனைய அரபு நாடுகளின் பொருட்களுக்கு வலை வீச்சு

qatar

Contributors
author image

Editorial Team

கத்தார் நாட்டில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், பக்ரைன் மற்றும் எகிப்து நாடுகளின் பொருட்கள் விற்பனைக்கு தடை விதித்துள்ளது.

ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்வதாக கத்தார் மீது சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், பஹ்ரைன் மற்றும் எகிப்து உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்தன. கத்தாருடன் ஆன அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொண்டன.

பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்யவில்லை என கத்தார் மறுத்தது. இருந்தாலும் அதை ஏற்காமல் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக நடந்து கொண்டன.

எனவே, தங்களுக்கு வேண்டிய உணவு பொருட்களை துருக்கி, மொராக்கோ, ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து கத்தார் இறக்குமதி செய்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை 5-ந்தேதி முதல் இது நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகளின் பொருட்கள் நேரடியாக இறக்குமதியாகாமல் வேறு நாடுகளின் வழியாக கத்தாருக்குள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

அதை அறிந்த கத்தார் அரசு சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், பக்ரைன் மற்றும் எகிப்து நாடுகளின் பொருட்கள் விற்பனைக்கு தடை விதித்துள்ளது.

அதிகாரிகள் கடைகள் தோறும் சென்று அந்நாட்டு பொருட்கள் விற்கப்படுகிறதா? என சோதனை செய்கின்றனர். மீறி விற்கப்படும் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. கடைக்காரர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Web Design by The Design Lanka