கத்தாரில் போதையில் கார் ஓட்டியவருக்கு 40 சவுக்கடி - Sri Lanka Muslim

கத்தாரில் போதையில் கார் ஓட்டியவருக்கு 40 சவுக்கடி

Contributors

-தோஹா-

கத்தார் நாட்டில் குடி போதையில் கார் ஓட்டி போலீசாரிடம் சிக்கிய இந்திய டிரைவருக்கு 40 சவுக்கடி வழங்கும்படி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 


கத்தார் தலைநகர் தோகாவில் உள்ள ஷபியத் கலிஃபா பகுதியில் தனது வாகனத்தை நிறுத்திய அந்த டிரைவர் முழு போதையில் இருந்ததை கண்டுபிடித்த ரோந்துப் போலீசார், அந்த வாகனத்தை சோதனையிட்ட போது உள்ளே அரை பாட்டில் மது இருப்பதையும் கண்டறிந்து, பிடிபட்ட இந்தியாவை சேர்ந்த அந்த டிரைவர் மீது வழக்குப் பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

 


இது தொடர்பாக நடந்த விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அந்த டிரைவரின் ஓட்டுனர் உரிமத்தை 2 மாதங்களுக்கு தற்காலிக ரத்து செய்த நீதிபதி, அவருக்கு 40 சவுக்கடிகளை தண்டனையாக வழங்கி உத்தரவிட்டார்.

Web Design by Srilanka Muslims Web Team