கத்தாரில் 03 இலங்கையர்களுக்கு சிறைத் தண்டனை - Sri Lanka Muslim

கத்தாரில் 03 இலங்கையர்களுக்கு சிறைத் தண்டனை

Contributors
author image

Editorial Team

சட்டவிரோதமாக போதைப் பொருள் விற்பனை செய்த மூன்று இலங்கையர்களுக்கு டோஹா- கட்டார் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.

இந்த மூன்று இலங்கையர்களின் பிரதான குற்றவாளியான நபர் ஹெரோயின் போதைப் பொருள் தன்வசம் வைத்திருந்தமைக்காக மூன்று ஆண்டு சிறை தண்டனையும் 2 லட்சம் கட்டார் ரியால் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ஏனைய இரண்டு குற்றவாளிகளுக்கு தலா ஒரு வருட சிறை தண்டனையும் தலா ஒரு லட்சம் கட்டார் ரியால் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கஞ்சா போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் அதனை பயன்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது.

கட்டார் உள்துறை அமைச்சுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

போதைப் பொருளை கொள்வனவு செய்யும் நபர் போல் ஒரு ஒற்றனை அனுப்பி சந்தேக நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அப்போது சந்தேக நபர்கள் இருந்த வீட்டை சோதனையிட்ட போது ஹெரோயின் மற்றும் கஞ்சா பொதிகளும் பெருமளவில் கைப்பற்றப்பட்டுள்ளன.

போதைப் பொருள் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களை தண்டனை காலம் முடிந்ததும் நாடு கடத்துமாறும் கட்டார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (tw)

Web Design by Srilanka Muslims Web Team