கத்தார் கண்டனம் - Sri Lanka Muslim
Contributors
author image

BBC

கத்தாரில் விமானம், கடல் மற்றும் தரை மார்க்கமான போக்குவரத்துக்களை மீண்டும் தொடங்க வளைகுடா அண்டை நாடுகள் விதித்திருந்த நிபந்தனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மறுப்புத் தெரிவித்ததற்கு கத்தாரின் வெளியுறவுத்துறை அமைச்சர் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

சர்வதேச உறவுகளின் நெறிமுறைகளுக்கு மாறாக அந்த நாடுகளின் நிலைப்பாடு அமைந்திருப்பதாக ஷேக் முகமது அல் தானி தெரிவித்துள்ளார்.

செளதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள், கத்தார் தீவிரவாதத்திற்கு நிதியுதவி செய்வதாக குற்றஞ்சாட்டியுள்ளன.

ஆனால், கத்தார் இதனை மறுத்துள்ளது.

இச்சூழலில், கத்தாரிடம் வழங்கப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய பட்டியல் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டதல்ல என்று கடந்த செவ்வாய்க்கிழமை செளதி வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியிருந்தார்.

வளைகுடா நாடுகள் விதித்த கட்டுப்பாடுகள் கத்தாரில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.

எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் நிறைந்த ஒரு நாடு அதன் 2.7 மில்லியன் மக்கள் தொகையின் அடிப்படை தேவைகளுக்கு இறக்குமதியை நம்பியே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team