கத்தார் வாழ் இலங்கை உலமாக்கள் ஒன்றியத்தின் 2 வது ஆண்டு நிறைவு தினமும் புதிய நிருவாகத் தெரிவு நிகழ்வும் - Sri Lanka Muslim

கத்தார் வாழ் இலங்கை உலமாக்கள் ஒன்றியத்தின் 2 வது ஆண்டு நிறைவு தினமும் புதிய நிருவாகத் தெரிவு நிகழ்வும்

Contributors
author image

எம்.எல்.பைசால் (காஷிபி)- Qatar

அஷ்ஷெய்க் எம் .எல் பைசா ல் (காஷிபி)
பொதுச் செயலாளர்
கத்தார் வாழ் இலங்கை உலமாக்கள் ஒன்றியம்
(இத்திஹாதுல் உலமா )


கடந்த 2015 ஆண்டு முதல் இயங்கி வரும் இலங்கை ஆலிம்களை மையமாகக் கொண்ட கத்தார் வாழ் இலங்கை உலமாக்கள் அமைப்பின் (இத்திஹாதுல் உலமா ) நிறைவேற்றுக் கூட்டத்தின் புதிய நடப்பாண்டிற்கான 2018/2019 நிருவாகத் தெரிவு 2018/03/30 ஆம் திகதி கத்தார் டோஹா பனார் மண்டபத்தில் அமைப்பின் தலைவர் அஷ்n~ய்க் : அவ்ன் அன்ஸார் ( இஸ்லாஹி) அவர்களின் தலைமையில் இடம் பெற்றது .

அக்கூட்டத்தில் புதிய நிருவாகிகள் தெரிவு செய்யப்பட்டத்துடன் கடந்த நிருவாக காலத்தில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் அறிக்கைப்படுத்தப்பட் டமை குறிப்பிடத்தக்கது.

அமைப்பின் பொதுச் செயலாளர் அஷ்n~ய்க்: எம் .எல் பைசால் (காஷிஃபி) அவர்களினால் பின்வரும் விடயங்கள் அமைப்பின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் பற்றியும் சில செயற்பாடுகள் பற்றியும் விபரிக்கப்பட்டன.

கத்தார் நாடு ஏனைய அரபு நாடுகளைப் போல் அல்லாமல் சமூகமாக இயங்குவதற்கான திறந்த அங்கீகாரத்தினையும் அதற்கான ஏற்பாடுகளையும் வழங்கியுள்ளது அந்த வகையில் இலங்கை நாட்டவர்களைப் பொறுத்தளவில் பல அமைப்புகள் , சமூக நல இயக்கங்கள் என இயங்கி வரும் வேளையில் உலமாக்கள் நலன் பற்றியும் அவர்களது சேவையினை ஒரே குடையின் கீழ் பெற்றுக் கொடுப்பது பற்றியுமான சிந்தனை எல்லோராலும் விரும்பபட்டது ,வெளிநாட்டில் வாழும் இலங்கை உலமாக்கள் சமூக நலன் கருதி தம்மிடையே கருத்தாடல்களையும் ,மற்றும் தஃவா இயக்கங்களில் ஈடுபடும் உலமாக்கள் மத்தியில் உள்ள கருத்து வேறுபாடுகளை கலந்துரையாடுவதற்கான மையத்தின் அவசியமும் எதிர்ப்பார்க்கப்பட்ட வேளை இதன் அங்குரார்பண நிகழ்வு இடம்பெற்றது அல்ஹம்து லில்லாஹ் .

எமது நாட்டின் பல பெறுமதி வாய்ந்த உலமாக்கள் தமது பெரும்பாலான காலத்தினை வெளிநாட்டில் செலவு செய்வதனால் அவர்களின் பங்குபற்றுதலையும், சேவையினையும் சமூகத்திற்கும் , உலமாக்களுக்கும் பெற்றுக் கொடுக்க வேண்டிய தேவை உணரப்பட்டது.

அல்லாஹ்வின் உதவியினால் இத்திஹாத் உலமா மேற் சொன்ன அவசியங்களையும , தேவைகளையும் கருத்திற் கொண்டு கடந்த இரண்டரை வருட காலத்திற்குள் இத்திஹாத் அதன் செய்தியினை உரியவர்களை சென்றடைய வைத்துள்ளது.

கடந்த இரு வருட காலத்தில் இத்திஹாதின் பணிகள்
• கடல் கடந்து வாழும் இலங்கையர்கள் என்ற ரீதியில் பல அரபுக் கல்லூரிகளில் கற்ற ஆலிம்களை ஓர் அணியாகக் கொண்டு அவர்களிடையே அறிமுகத்தினை ஏற்படுத்தி தஃவா களத்தில் பல முகாங்களில் உள்ள சகோதரர்களை ஒன்றிணைத்தமை.

• தஃவா அமைப்புக்களில் இணைந்து மார்க்கப் பணியினை மேற்கொள்ளும் ஆலிம்களை கருத்து வேறுபாடுகளை களைந்து பயணிப் பதற்காக களம் அமைத்துக் கொடுத்தமை.

• கத்தார் நாட்டில் பணி புரியும் ஆலிம்களுக்கான தொழில் வழிகாட்டல்கள் ,கனனி அறிவு விருத்தி செயற்பாடுகள் மற்றும் இஸ்லாமிய கருத்தரங்குகள் மூலம் அவர்களது தேடலுக்கு பங்காற்றுகின்றமை.

• கத்தார் நாட்டின் அரச விருந்தினர்களாக இலங்கையில் இருந்து வரும் அமைச்சர்களையும் மற்றும் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா பிரதிநிதிகளையும் ,தஃவா அமைப்புகளின் தலைவர்களையும் மற்றும் கல்விமான்களையும் சந்தித்து நாடு பற்றியும் தஃவா செயற்பாடு பற்றியும் கருத்தாடல்களை செய்து எமது செய்தியினை உரியவர்களுக்கு எத்திவைக்க சந்தர்ப்பம் கிடைத்தமை.

• தாம் கற்ற அரபுக் கலூரிகளுக்கான பழைய மாணவ சங்க கத்தார் கிளைகளை ஏற்படுத்திக் கொள்ள ஊக்கம் அளித்தமையும் மற்றும் அரபுக் கல்லூரிகளின் பழைய மாணவ கிளைகளுடன் உறவினை கட்டியெளுப்பியமையும்.

• இலங்கையினை பிரதிநித்துவ படுத்தி கத்தார் நாட்டில் இயங்கும் தஃவா அமைப்புகளுடனும் மற்றும் சமூக நல அமைப்புகளுடனும் சந்திப்புகளை மேற்கொண்டு சிநேகபூர்வாமான உறவினை ஏற்படுத்தியமை.

• அனர்த்த காலங்களின் போது அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா மூலம் பாதிக்கப்பட்டவர்களை சென்றடைவதற்காக குறிப்பிட்ட தொகைப்பணம் அனுப்பி வைக்கப்பட்டமை.

இதனைத் தொடர்ந்து இத்திஹாத் உலமா அமைப்பின் யாப்புக் குழுவின் தலைவரான அதன் பொதுச் செயலாளர் எம் .எல் பைசால் (காஷிபி) அவர்களினால் இத்திஹாத் அமைப்பின் தலைவர் அஷ்n~ய்க்: முகம்மது அவ்ன் அன்ஸார் (இஸ்லாஹி) அவர்களிடம் உத்தியோக பூர்வாமாக யாப்பினை கையளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

பின்னர் 27 அரபுக் கல்லூரிகளை பிரதித்துவப்படுத்தும் உலமாக்களில் இருந்து பின்வருவோர் கொண்ட நிருவா குழுவும் தெரிவு செய்யப்பட்டது.

தலைவராக அஷ்n~ய்க்: முகம்மது அவ்ன் அன்ஸார் (இஸ்லாஹி) அவர்களும் , பொதுச் செயலாளராக அஷ்n~ய்க் எம் .எல் பைசா ல் (காஷிபி) அவர்களும் சபையோரால் மீண்டும் தெரிவு செய்யப்பட்டனர்.

பொருளாளர் அஷ்n~ய்க் M B M.அஸ் பர் (பலாஹி ) உதவித் தலைவர்களாக அஷ்n~ய்க் M.ரிப்ஸீன் (முர்ஸி), அஷ்n~ய்க் முகம்மது அஸ்ரப் (அல் அய்னி) உதவிச் செயலாளர்களா அஷ்n~ய்க் MI.புஹாரி (ஹாமி ), அஷ்n~ய்க் முகம்மது பவ்ஸான் (ரவ்லி), நிதிச் செயலாளர் அஷ்n~ய்க் M கபீர் (ஸஹ்வி), நிருவாக இணைப்பாளர் அஷ்n~ய்க் A.நஜீம் (தப்லீகி) ஆகியர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

பின்னர் பின்வரும் உபகுழுக்கான செயலாளர்கள் தெரிவும் இடம்பெற்றன
1. தஃவா / கல்வி : அஷ்n~ய்க் S.அப்துல் ஷுகூர் (ஹாசிமி)

2. சமூக சேவை, நலன் பேணல் : அஷ்n~ய்க் காமில் ஹசன் (அல் முஸ்தவ்பி)

3. வழிகாட்டல் / ஆலோசனை : அஷ்n~ய்க் MR.முகம்மது ருஸ்னி (ஸஹ்ரி)

4. தொழில் வழிகாட்டல் பிரிவு : அஷ்n~ய்க் AA.அப்துர்ரஸ்ஸாக் (ஷர்கி)

5. Media & Publication Unit: அஷ்n~ய்க் AH.அஸீம் (ஹக்காணி)

6. Event Management Unit : அஷ்n~ய்க் MS.முகம்மது ஷாபி (மனாரி)

7. OBA Unit : அஷ்n~ய்க் அஸ்வர் முகம்மத் (ஸலபி )

8. விளையாட்டுப் பிரிவு : அஷ்n~ய்க் MLM .பாஹிம் (கபூரி)

9. மொழி வள நிலையம் : அஷ்n~ய்க்: முகம்மது அவ்ன் அன்ஸார் (இஸ்லாஹி) .அஷ்n~ய்க் முகம்மது அஸ்ரப் (அல் அய்னி)

10. Sri Lanka Unit : அஷ்n~ய்க் இர்ஷாத் (இஸ்லாஹி)

நிருவாக குழுவினர்கள்

அஷ்n~ய்க் MR. இஜாஸ் ஷறபி
அஷ்n~ய்க் M.இன்திகாப் நூரி
அஷ்n~ய்க் A.அன்வர் காசிமி
அஷ்n~ய்க் M.அஸ்வர் அஹ்ஸனி
அஷ்n~ய்க் M. இர்பான் (இஹ்ஸானி)
அஷ்n~ய்க் AL.மௌஜூத் (பாகவி)
அஷ்n~ய்க் : ஷபீகுர் ரஹ்மான் (ரஷாதி )
அஷ்n~ய்க் MJ.முகம்மது முஜாஹித் (ஹிழ் ரி )
அஷ்n~ய்க் முகம்மது சியா உல் ஹக் ( மஜீ தி)
அஷ்n~ய்க் S.சிராஜ் முகம்மத் (நளீமி)
பொறுப்புகளை ஏற் றுகொண்ட சகல ஆலி ம்களும் உறுதிப் பிரமாணங்களை எடுத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது .

WhatsApp Image 2018-03-30 at 1.27.36 PM WhatsApp Image 2018-03-30 at 2.13.12 PM WhatsApp Image 2018-03-30 at 3.40.56 PM

Web Design by Srilanka Muslims Web Team