கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களின் GFK Gala Day - 2017 ஒன்றுகூடல் - Sri Lanka Muslim

கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களின் GFK Gala Day – 2017 ஒன்றுகூடல்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

-Mohamed Ajwath-


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு !

கத்தார் தேசிய விளையாட்டு தினத்தினை முன்னிட்டு (Sports Day) கல்முனைக்கான வளைகுடா அமையத்தினது ஏற்பாட்டில் கத்தாரில் வசிக்கும் கல்முனை சகோதரர்களுக்கான விசேட ஒன்றுகூடல் GFK Gala Day – 2017 எதிர்வரும் செவ்வாய்க்கிழமை, 14-02-2017 காலை 08:00 மணி தொடக்கம் மாலை நான்கு மணி வரை அஷ் ஷஹனிய்யாஹ்வில் அமைந்துள்ள “டொசாரி பார்க்”யில் (Al Dosari Zoo And Game Reserve.) ஏற்பாடாகியுள்ளது. இந்நிகழ்வில் கத்தார் வாழ் கல்முனை சகோதரர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இந்நிகழ்வானது முழுநாள் நிகழ்வாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் இந்நிகழ்வினை மெருகூட்டும் வகையில் விளையாட்டுக்கள் மற்றும் கலைக் கலாசார நிகழ்வுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கத்தாரில் குடும்ப சகிதம் வசிக்கும் சகோதரர்களுக்கென விசேட ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதனால் குடும்ப சகிதம் கலந்து இந்நிகழ்வை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

நிகழ்வில் கலந்துகொள்ளும் சகோதரர்கள் கீழே உள்ள தொலைபேசி இலக்கதினூடாகவோ 55714262, 70374049 மற்றும் 70111483 அல்லது கீழுள்ள Online Link ஊடாகவோ உங்களது வரவினை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

Link: https://docs.google.com/spreadsheets/d/19l4PMsqxT39qYajXSVnOjIYvPLet74SZ5h9Xpcq70_w/edit?usp=sharing

ஒன்று கூடி, உரையாடி, உறவாடி உறவுகளையும், நட்புக்களையிம் வளர்க்க வாஞ்சையுடன் அழைக்கின்றோம்.
ஏற்பாடு: Gulf Federation for Kalmunai – GFK

qa

Web Design by Srilanka Muslims Web Team