கந்தக்காடு முகாமிலிருந்து தப்பியோடியவர்களில் 232 பேர் சிக்கினர்..! - Sri Lanka Muslim

கந்தக்காடு முகாமிலிருந்து தப்பியோடியவர்களில் 232 பேர் சிக்கினர்..!

Contributors
author image

Editorial Team

கந்தக்காடு புனர்வாழ்வு முகாமிலிருந்து தப்பிச்சென்றவர்களில் 232 பேர் பொலிசாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.

புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.

கந்தக்காடு புனர்வாழ்வு முகாமிலிருந்து நேற்றிரவு (28) இடம்பெற்ற மோதலின் போது, புனர்வாழ்வு பெற்றுவந்த 500க்கும் மேற்பட்டோர் வேலிகளை உடைத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

மேற்படி மோதல் சம்பவத்தின்போது, புனர்வாழ்வளிக்கப்பட்டு வந்த கைதி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.

அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக வெலிகந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று புனர்வாழ்வு நிலையத்துக்கு சென்றிருந்தபோதே இவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

வன்முறையாக நடந்து கொண்ட நபர்களால், புனர்வாழ்வு மையத்தின் முள்வேலிகள் உடைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் நடந்தபோது, தப்பியோடிய 500க்கும் மேற்பட்டோர் புனர்வாழ்வு மையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தப்பியோடியவர்களைக் கண்டுபிடிக்க இராணுவமும் பொலிசாரும் இணைந்து தொடர்ந்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team