கப்ரால் மற்றும் லலித் வீரதுங்க ஆகியோரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு! - Sri Lanka Muslim

கப்ரால் மற்றும் லலித் வீரதுங்க ஆகியோரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு!

Contributors

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரை எதிர்வரும் 17 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கோட்டை நீதவான் திலின கமகே நேற்று உத்தரவிட்டுள்ளார்.

லலித் வீரதுங்க ஜனாதிபதியின் செயலாளராக கடமையாற்றிய போது, கடந்த 2014 ஆம் ஆண்டு எவ்வித அனுமதியும் இன்றி இலங்கையின் நற்பெயரை அதிகரிக்கவென கூறி டப்ளியூ.ஆர்.குறுப் என அழைக்கப்படும் தரப்புடன் உடன்படிக்கையை செய்து, அதனை இலங்கை மத்திய வங்கிக்கு அனுப்பியதாகவும் மத்திய வங்கி அமெரிக்க பிரஜையான இஷாட் ஷா சுபேரி என்பவருக்கு 6.5 மில்லியன் லட்சம் டொலர்களை வழங்கியதாக தெரிவித்து, தினியாவல பாலித ரேரர் தாக்கல் செய்துள்ள வழக்கை ஆராய்ந்த நீதவான், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team