'கம்பியூட்டரை ரீசெட் பண்ணும்போது மெமரி கார்ட்டை சரிபாருங்கள்' - ரணிலுக்கு சஜித் பதில்!! - Sri Lanka Muslim

‘கம்பியூட்டரை ரீசெட் பண்ணும்போது மெமரி கார்ட்டை சரிபாருங்கள்’ – ரணிலுக்கு சஜித் பதில்!!

Contributors

”கடந்த இரண்டரை வருட காலங்களில் நடந்தவற்றை நாட்டு மக்கள் மறக்கவில்லை. கம்பியூட்டரை ரீசெட் பண்ணும்போது மெமரி கார்ட்டை சரிபாருங்கள். மக்களின் மெமரி பழுதாகவில்லை” என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்றத்தில் இன்று (07) ஆற்றிய விசேட உரைக்கு பதிலளித்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னதாக உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “ இப்போது நம் நாடு இலவச கணினி போல வேலை செய்யவில்லை, முதலில் நாம் என்ன செய்ய வேண்டும்.  இந்த கணினியை மறுவடிவமைப்பு செய்ய வேண்டும்.  அதைத்தான் இப்போது செய்து கொண்டிருக்கிறோம். இடைக்கால வரவு- செலவு திட்டம் என்பது கணினியை மீட்டமைப்பதாகும்.  அப்போது நவீன முறைமயை நிறுவி, எந்த வைரஸும் உள்ளே நுழையாத வைரஸ் கார்டையும் நிறுவலாம்.  ஆனால், அதையெல்லாம் செய்ய, கணினியை மறுதொடக்கம் செய்து மீட்டமைக்க வேண்டும்” என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team