கருணா அம்மானின் புதிய அரசியல் கட்சியினை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா.? - Sri Lanka Muslim

கருணா அம்மானின் புதிய அரசியல் கட்சியினை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா.?

Contributors
author image

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

வீடியோ பொது செயலாளர் கமலதாஸின் பதில்கள்:- 


முன்னாள் பிரதி அமைச்சரும், சிறீலங்க சுதந்திர கட்சியின் பிரதி தலைவரும், தமிழ் ஈழ விடுதலை புலிகளின் முன்னாள் கிழக்கு பிராந்தியத்திற்கான தளபதியுமாக இருந்த விநாயக மூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா அம்மான் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி எனும் புதிய அரசியல் கட்சி ஒன்றினை உருவாக்கி உள்ளார்.

குறித்த கட்சியினை தமிழ் சமூகம், புலம் பெயர் தமிழர்கள், முக்கியமாக வடகிழக்கு மாகாணங்களில் வாழுகின்ற தமிழ் பேசுகின்ற மக்கள், தேசியத்தினை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற தேசிய கட்சிகள், தமிழ் மக்களை பிரதி நிதித்துவபடுத்தி வருகின்ற அரசியல் கட்சிகள் ஏற்றுகொள்ளுமா.? அல்லது கருணா அம்மாணின் புதிய அரசியல் கட்சிக்கு ஆதரவளிக்குமா.? என்ற கேள்விகளோடு இன்னும் பல கேள்விகளுக்கு பதிலளிக்கின்றார் புதிய அரசியல் கட்சியின் பொதுசெயலாளர் வருன் கமலதாஸ்.

கட்சியின் பொது செயலாளரக நியமிக்கப்பட்டுள்ள வருன் கமலதாஸ் மிக நீண்ட காலமாக கிழக்கு மாகாணத்தில் ஆங்கில ஆசிரியராகவும், சிறீலங்கா சுதந்திர ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட செயலாளராகவும், விஸ்வ கிந்து பரிசத்தின் கிழக்கு மாகாணத்திற்கான பிராந்திய இணைப்பாளராகவும், 1989ம் ஆண்டு ஈரோஸ் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குனசீலனின் பிரத்தியேக செயலாளராகவும், முன்னாள் பிரதி அமைச்சரும் பராளுமன்ற உறுப்பினருமான கனேச மூர்த்தியின் செயலாளராகவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் மாவட்ட தேர்தல் இணைப்பாளராகவும், ஐக்கிய நாடுகள் சபையின் உலக தொழிலாளர் இஸ்தாபனத்தினுடைய வாழ்வாதார இணைப்பாளராக இலங்கை அரசாங்கத்திற்கு கடமையாற்றி உள்ளதுடன் ஐக்கிய நாடுகள் சபையினுடைய (UNHER) அகதிகளுக்கான மீள் குடியேற்ற மாவட்ட இணைபாளராக மீள் குடியேற்ற அமைச்சில், கடமையாற்றி இருக்கின்ற அனுபவங்களானது முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அமம்மானின் புதிய அரசியல் கட்சிக்கு வருன் கமலதாஸ் பொது செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பதும், கடமையாற்றுவதும் முக்கிய விடயமாக பார்க்கப்படுகின்றது.

அந்த வகையிலே பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள வருன் கமலதாஸிடம் கேட்கப்பட்ட கேள்விகளான…
01- முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மாண் உருவாக்கியுள்ள புதிய அரசியல் கட்சியின் பொது செயலாளராக உள்ள நீங்கள் புதிய உங்களுடைய கட்சி சம்பந்தமாக விளக்கமளிக்க முடியுமா.?

02- உங்களுடைய தலைவர் ஆரம்பித்துள்ள புதிய அரசியல் கட்சியானது தேர்தல்களில் போட்டியிடுகின்ற பொழுது தமிழ் மக்களை பிரதி நிதித்துவப்படுத்தி அரசியல் செய்து வருக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மத்தியில் தமிழ் மக்கள் மத்தியில் உங்களுடைய கட்சிக்கு அங்கீகாரம் கொடுத்து அதனை ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கின்றதா.?

03- இவ்வாறு பதிலளிக்கின்ற நீங்கள் விடுதலை புலிகள் அமைப்பில் முக்கிய பதவியினை வகித்த உங்களுடைய தலைவர் கருணா அம்மானின் பிரிவுதான் விடுதலை புலிகளின் முற்றுப்புள்ளிக்கு முக்கிய காரணம் என உலகலாவிய ரீதியில் தமிழ் சமூகத்தினால் பார்க்கப்படுகின்றது. இந்த சூழ்நிலையில் உங்களுடைய கட்சியினை தமிழ் மக்கள் ஏற்றுகொள்வார்களா.?

04- உங்களுடைய புதிய கட்சியானது கிழக்கு மாகானத்தினை மட்டும் மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளதா.? அல்லது வடமாகாணத்திற்குள்ளும் விஸ்தரிக்கப்பட்டுள்ளதா.?

05- முஸ்லிம்கள் வாழுகின்ற பிரதேசங்களுக்குள்ளும் எங்களுடைய கட்சியானது அரசியல் முன்னெடுபுக்களை செய்யும் என முக்கியமான பதிலினை கூறினீர்கள். ஆனால் யுத்த காலங்களிலே முஸ்லிம் பிரதேசங்களில் இடம் பெற்ற இன படுகொலைகள் அனைத்தும் உங்களுடைய கட்சியின் தலைவர் கருணா அம்மானின் மேற்பார்வையிலேயே இடம் பெற்றதாக பரவலாக மட்டுமல்லாமல் புலம்பெயர் தமிழர்கள் கூட குற்றம் சுமர்த்துகின்றார்கள். இந்த நிலையிலே எவ்வாறு உங்களுடைய கட்சியினை முஸ்லிம் பிரதேசங்களில் முன்னெடுத்து செல்வீர்கள்.? எவ்வாறு மறக்க முடியாத வடுவினை நிவர்த்தி செய்வீர்கள்.?

06- முஸ்லிம் பிரதேசங்களில் உங்களுடைய புதிய கட்சியின் கொள்கை பரப்பு செயற்பாடுகள் எவ்வாறு அமையப்போகின்றது.?

07- உங்களுடைய கட்சியின் பெயரினை பார்க்கின்ற பொழுது சுதந்திர முன்னணி என்ற நாமத்தோடு சிவப்பு, நீலம், மஞ்சல் போன்ற வர்ணங்கள் சேர்க்கப்பட்டுள்ளமைக்கான முக்கிய காரணம் என்ன.? ஏன் முஸ்லிம்களை பிரதி நிதித்துவப்படுத்தி பச்சை வர்ணம் சேர்க்கப்படவில்லை.?

08- உங்களுடைய புதிய கட்சிக்கு முன்னாள் கிழக்கின் முதலமைச்சராக இருந்த சிவனேசதுறை சந்திரகாந்தனுடைய (பிள்ளையான்) ஆதரவாளர்களினதும், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினுடைய ஆதரவும் கிழக்கு மாகாணத்தில் பரவலாக கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றதா.?

09- வடகிழக்கு மாகாண அரசியலினை எடுத்துக்கொண்டால் இந்தியாவினுடைய, அதிலும் முக்கியமாக தமிழ் நாட்டு அரசாங்கத்தினுடைய தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது. இந்த நிலையில் புதிதாக ஆரம்பித்துள்ள உங்களுடைய கட்சி சம்பந்தமாக இந்தியாவினுடைய நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் என நினைக்கின்றீர்கள்.?

10- உங்களுடைய கட்சியின் தலைவரை போன்றே ஈ.பி.ஆர்.எல்.எஃப், புலொட், டெலோ போன்ற ஆயுத போராட்ட குழுக்கள் தற்பொழுது தழிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து ஜனநாயக நீரோட்டத்திற்குள் வந்து தங்களது அரசியல் முனெடுப்புக்களை செய்து வருகின்றனர். இவ்வாறு ஜனநாக நீரோட்டத்திற்குள் வந்துள்ள கட்சிகளுடன் சேர்ந்து உங்களுடைய கட்சியானது ஏதும் உடன்பாட்டு அரசியலுக்குள் வந்துள்ளதா.?

11- அன்மைக்காலமாக தமிழ் மக்களினுடைய உரிமைகள் சம்பந்தமாக குரல் கொடுத்து வருகின்ற தமிழ் மக்கள் பேரவையினை உங்களுடைய கட்சியானது கொள்கை ரீதியில் எவ்வாறு பார்க்கின்றது.

12- கடையியாக உங்களுடைய தலைவர் கருணா அம்மான் ஜனநாயக நீரோட்டத்திற்குள் ஆரம்பித்துள்ள புதிய அரசியல் கட்சி சம்பந்தமாக இலங்கை தமிழர்களுக்கும், உலக தமிழர்களுக்கும் எதனை வேண்டுகோளாக முன்வைக்க விரும்புகின்றீர்கள்.?

போன்ற முக்கிய பதினிரண்டு கேள்விகளுக்கு முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் ஆரம்பித்துள்ள தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி எனும் புதிய அரசியல் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள வருன் கமலதாஸ் வழங்கிய பதில்களின் காணொளியானது எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team