கல்­முனை ஸாஹிரா பிரதி அதி­பரை தாக்­கிய கல்வி பணிப்பாளர் கைது - Sri Lanka Muslim

கல்­முனை ஸாஹிரா பிரதி அதி­பரை தாக்­கிய கல்வி பணிப்பாளர் கைது

Contributors

கல்முனை ஸாஹிராக் கல்லூரி பிரதி அதிபர் மீது கல்முனை வலய பிரதி கல்வி பணிப்பாளர்  ஏ.எல்.எம்.முக்தார் இன்று செவ்வாய்க்கிழமை காலை தாக்குதல் நடத்தியுள்ளார். இத­னை­ய­டுத்து குறித்த நபரை கைது செய்­துள்­ள­தாக  கல்முனை பிராந்தியத்திற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னகோன் தெரி­வித்­தார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வ­து,
கல்முனை ஸாஹிராக் கல்லூரி இன்று விஜயம் குறித்த குறித்த பிரதி கல்வி பணிப்பாளர் பதில் அதிபரின் அனுமதியின்றி வகுப்புக்களுக்கு விஜயம் செய்துள்ளார்.
இதன்போது 10ஆம் ஆண்டிலுள்ள வகுப்பறைக்கு சென்று பாடத்திட்ட புத்தகத்தில் கீறல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்.
இந்த செயற்பாடு குறித்து ஆசிரியர்கள் குறித்த பிரதி கல்வி பணிப்பாளரிடம் அதிருப்தியினை வெளியிட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பிரதி கல்வி பணிப்பாளர் கல்லூரி பிரதி அதிபர் ஏ.கபூர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதனையடுத்து கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் பதற்றமான சூழ்நிலையொன்று ஏற்பட்டது. தாக்குதலுக்கு உள்ளன பிரதி அதிபர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆசிரியர் மீதான தாக்குதலை அடுத்து மாணவர்கள் பிரதி கல்வி பணிப்பாளரின் மோட்டார் சைக்­கி­ளை சேதப்படுத்தியுள்ள­னர்.
பிரதி கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் கல்முனை ஸாஹிரா கல்லூரியின் அதிபர் நேர்முக பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.v.lk

Web Design by Srilanka Muslims Web Team